பூமித்தாய்
பூமித்தாய், தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, விலை 70ரூ.
சிறந்த கார்ட்டூனிஸ்ட், சிறந்த எழுத்தாளர் என்று புகழ் பெற்றுள்ள மதன் எழுதிய சிறந்த நூல் இது. பூமியைப் பற்றிய உண்மைகளை மனிதன் அறிந்துகொள்ளாமல் இருந்த காலக்கட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளை நகைச்சுவை ததும்ப எடுத்துக்கூறுகிறார். பூமியை சூரியன் சுற்றி வருகிறது என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்த காலத்தில், இல்லை இல்லை. பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்று புரூனோ என்ற இத்தாலிய நாட்டு அறிஞர் சொன்னார். உண்மையைச் சொன்னதற்காக அவருக்கு விதிக்கப்பட்டது மரண தண்டனை. அவரை உயிரோடு தீயில் எரித்துக் கொன்றனர். இப்படி வானவெளி பற்றியும், கிரகங்கள் பற்றியும் பயனுள்ள தகவல்களை தருகிறார் மதன். நன்றி: தினத்தந்தி, 16/9/2015.
—-
மஹ்ஷரை நோக்கி, ஜெ. முஹம்மது நாஸிம், சென்னை, வலை 120ரூ.
மறுமை நாளின் இஸ்லாமியக் கோட்பாடுகள் புனித குர்ஆன், ஹதீஸ் ஒளியில் இந்த நூலில் விவரிக்கப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி, 16/9/2015.