ஐ.ஏ.எஸ். பொது அறிவு கேள்விகள் பதில்கள்
ஐ.ஏ.எஸ். பொது அறிவு கேள்விகள் பதில்கள், நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது அனைவரது லட்சியம், கனவாகவே இருக்கும். அதற்கான சூழலும், வழிகாட்டுதலும் அமையப்பெற்றவர்கள் அந்த இலக்கை எட்டிப்பிடித்து விடுகிறார்கள். அத்தகைய வழிகாட்டுதலை செவ்வனே செய்துள்ளது இந்த நூல். சிவில் சர்வீசஸ் தேர்வின் கீழ் எத்தனை பணிகள் வருகின்றன. சிவில் சர்வீசஸ் தேர்வை யார், யார் எழுதலாம்? எத்தனை முறை எழுதலாம்? அதற்கான வயது வரம்பு என்ன? , அதற்கு நாம் தேர்வு செய்ய வேண்டிய படிப்புகள் யாவை? என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன், முக்கியமான பொது அறிவு கேள்விகளும், அதற்கான பதில்களும் அழகுற தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/4/2014.
—-
ஆல்பிரட் ஹிட்ச்காக் மர்மக் கதைகள், விகடன் பிரசுரம், சென்னை, விலை 110ரூ.
திகில் படங்கள் எடுத்து, உலகப் புகழ்பெற்ற பட அதிபர் – டைரக்டர் ஆல்பிரட் ஹிட்ச்காக். அவருடைய சைகோ, பேர்ட்ஸ் போன்ற படங்களைப் பார்த்து அலறி அடித்துக்கொண்டு ஓடியவர்கள் பலர். அவர் ஓர் எழுத்தாளரும் ஆவார். அவர் எழுதிய 11 சிறுகதைகள் இந்நூலில் உள்ளன. படிக்கும்போது இதயதுடிப்பு அதிகரிக்கும் என்பது நிச்சயம். பெரு. முருகனின் தமிழாக்கம் சிறப்பாக உள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/4/2014.