கல்வெட்டுக்கலை
கல்வெட்டுக்கலை, பொ. ராசேந்திரன், சொ. சாந்தலிங்கம், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை, பக். 240, விலை 250ரூ.
தமிழ் மன்னர்கள் பற்றியும், தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் அரிய கல்வெட்டுகளும், ஓலைச்சுவடிகளும், செப்பேடுகளும் பெரிதும் உதவுகின்றன. நாம் அச்சில் படிக்கும் தமிழ் எழுத்துக்களும், கல்வெட்டு எழுத்துக்களுக்கும் பெரிய மாறுதல் காணப்படும். கல்வெட்டைப் படிக்க மிகுந்த திறமையும், பயிற்சியும் வேண்டும். பொ. இராசேந்திரன், சொ. சாந்தலிங்கம் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய இப்புத்தகத்தில், தமிழ்நாட்டின் முக்கிய கல்வெட்டுகள், பற்றி அபூர்வமான தகவல்கள் நிறைந்துள்ளன. இப்புத்தகத்தை எழுத அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு பக்கமும் உணர்த்துகின்றன. புத்தகத்தின் முடிவில் கல்வெட்டுகளின் வண்ணப்படங்கள் இடம் பெற்றுள்ளன. கல்லூரிகளில் பாடப்புத்தகமாக இடம் பெற தகுதியுள்ள நூல்.
—-
பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள், ஆர். குமரேசன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-853-4.html
சிறு முதலீட்டில் ஓய்வு நேரத்தை பயன்படுத்தி ஆண்டு முழுவதும் வருமானம் தரக்கூடிய வாழ்க்கை வசதியை அமைத்துக்கொள்ள இந்நூல் உதவுகிறது. பொழுதுபோக்காகவும், விளையாட்டாகவும் பண்ணைத்தொழிலை ஆரம்பித்து வருவாய் ஈட்ட வழிகாட்டுகிறது.
—-
நல்வழிக் கதைகள், இ. உஷா, நவரத்தினம் பதிப்பகம், 62/49 பர்கட் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ.
28 சிறுகதைகள் அடங்கிய நூல். ஒவ்வொரு கதையும், மாணவர்களிடம் நற்பண்புகளை வளர்க்கும் விதத்தில் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 14/8/2013
