நிழல் இளவரசி

நிழல் இளவரசி, வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-161-4.html

ஷாஜஹானின் பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தின் அந்தப்புரத்தின் தலைமைப் பதவிக்காகப் போட்டியிடும் இரண்டு இளவரசிகளின் போராட்டம் பற்றிய 17ஆம் நூற்றாண்டின் வரலாற்று புதினம். சக்கரவர்த்தி ஷாஜஹான், தன் காதல் மனைவி மும்தாஜின் நினைவாக நிர்மாணித்துக் கொண்டிருக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த சமாதியின் (தாஜ்மகால்) பின்னணியில், சக்கரவர்த்தியின் புதல்விகள் ஜஹனாராவும், ரோஷனாராவும் எல்லாவற்றிற்கும் போட்டியிடுகின்றனர். அந்தப்புரத்தின் ஆட்சி, சாம்ராஜ்யத்தின் எதிர்காலம், அவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படாததால் அரியணை வாரிசாக வர, இருவரும் வெவ்வேறு சகோதரர்களை ஆதரிக்கின்றனர். ஆனால், ஒருத்திதான், வெற்றி காணமுடியும். அந்த ஒருத்தி ஜஹானாராவின் வாழ்க்கையையும், அந்தக் காலத்திய பெண்களின் சிக்கலான வாழ்க்கை முறைகள் பற்றியும், தாஜ்மஹால் உருவெடுத்த விவரங்களையும் சரித்திர பின்னணியுடன் நூலாசிரியர் இந்து சுந்தரேசன் மிகவும் விலையுயர்ந்த இஸ்லாமிய ஆடையைப்போல் நெய்திருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் மதுரம் சுந்தரேசன். நன்றி: தினத்தந்தி, 11/9/2013.  

—-

 

அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 2வது தளம், உஷா பிரீட் காம்ப்ளக்ஸ், எண் 42, மால்வியா நகர், போபால் 462003, விலை 325ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-164-1.html 

2கோடி பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்த பிரபல எழுத்தாளர் ஸ்டீபன் ஆர்.கவி எழுதிய புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து தந்துள்ளார் நாகலட்சுமி சண்முகம். சிந்தனையை தூண்டுவதாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் புத்தகம் அமைந்துள்ளன. சாதனை படைக்க, திறமைகள் மட்டும் போதாது. சகசார்பு திறமைகளும் கட்டாயம் தேவை என்பது போன்ற கருத்தக்கள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. மக்களுடைய தனிப்பட்ட மற்றம் தொழில் ரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முழுமையான, ஒருங்கிணைந்த கொள்கை அடிப்படையிலான அணுகுமுறைகள் முழுமையாக கூறப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 14/8/2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *