காரேய் கருணை இராமாநுஜா

காரேய் கருணை இராமாநுஜா, வேதா டி. ஸ்ரீதரன், வேதப்ரகாசனம், பக். 174, விலை 150ரூ. ஸ்ரீமத் ராமானுஜரின், 1,000வது ஆண்டில் அவரைப் பற்றி பலரும் நூல் எழுதுகின்றனர். இந்நூல் அவ்வரிசையில் வந்துள்ள போதிலும், சற்று மாறுபட்ட சிந்தனைகளுடன் வெளிவந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, ராமானுஜர் தன் மனைவியைத் துறந்தது நியாயமா என்று ஆய்வு செய்கிறார். படிக்கச் சுவையாக உள்ளது. இந்நூலில், 11 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. கட்டுரைகளின் இடையில் பெட்டிச் செய்திகள் பல, புதிய செய்திகளை நமக்குத் தருகின்றன. உதாரணமாக, மத்திய பிரதேசத்தில் விதிஷா நகருக்கு அருகேயுள்ள […]

Read more

ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம்

ராஜீவ் படுகொலை-தூக்குக்கயிற்றில் நிஜம், பேட்ரிஷியா பப்ளிகேஷன், 2/40பி, இரண்டாம் தளம், ராம்நகர், நங்கநல்லூர், சென்னை 61, விலை 200ரூ. ராஜீவ்காந்தி படுகொலை பின்னணியில் தனக்கு தெரிந்த விஷயங்களை வெளியிட்டு உள்ளார், திருச்சி வேலுசாமி. திடுக்கிடும் தகவல்கள் பல இடம்பெற்று இருக்கின்றன. ராஜீவ் கொலை, தொடர்பாக அவர் எழுப்பிய வினாக்கள் இன்னும் விடைகாண முடியாமலே இருக்கின்றன என்பதை உணரமுடிகிறது. அத்துடன் அன்பு கணவரை பறிகொடுத்த சோனியாகாந்தி, பாசத் தந்தையை இழந்த பிரியங்கா காந்தி ஆகியோர் வேதனைகளின் மவுன வெளிப்பாடுகள் நெஞ்சை கனக்கச் செய்கிறது. நன்றி: தினத்தந்தி, […]

Read more