வீடுகளிலும் பள்ளிகளிலும் 5-எஸ்

வீடுகளிலும் பள்ளிகளிலும் 5-எஸ், வேதா டி.ஸ்ரீதரன், வேத ப்ரகாசனம், விலை 500ரூ. 5 -எஸ் என்பது ஒரு சிஸ்டம், பொருட்களை முறையாக வைப்பதுதான் அந்த சிஸ்டம். ஜப்பானிய வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் முதலிய அனைத்து இடங்களிலும் இந்த முறை அமலில் உள்ளது. அதை இங்கும் அமல்படுத்த வேண்டும் என்ற ஆவலில் வேதா டி.ஸ்ரீதரன் இந்த நூலை எளிய மொழி நடையில் எழுதியுள்ளார். பாராட்டக்கூடிய பயனுள்ள முயற்சி. நன்றி: தினத்தந்தி, 26/4/2017.

Read more

காரேய் கருணை இராமாநுஜா

காரேய் கருணை இராமாநுஜா, வேதா டி. ஸ்ரீதரன், வேதப்ரகாசனம், பக். 174, விலை 150ரூ. ஸ்ரீமத் ராமானுஜரின், 1,000வது ஆண்டில் அவரைப் பற்றி பலரும் நூல் எழுதுகின்றனர். இந்நூல் அவ்வரிசையில் வந்துள்ள போதிலும், சற்று மாறுபட்ட சிந்தனைகளுடன் வெளிவந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, ராமானுஜர் தன் மனைவியைத் துறந்தது நியாயமா என்று ஆய்வு செய்கிறார். படிக்கச் சுவையாக உள்ளது. இந்நூலில், 11 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. கட்டுரைகளின் இடையில் பெட்டிச் செய்திகள் பல, புதிய செய்திகளை நமக்குத் தருகின்றன. உதாரணமாக, மத்திய பிரதேசத்தில் விதிஷா நகருக்கு அருகேயுள்ள […]

Read more

காரேய் கருணை இராமாநுஜா

காரேய் கருணை இராமாநுஜா, வேதா டி. ஸ்ரீதரன், வேதா ப்ரகாசனம், பக். 192, விலை 150ரூ. வைணவ ஆசார்யார்களுள் மிகவும் முக்கியமானவர் ஸ்ரீராமாநுஜர். அவர் ஒரு புரட்சியாளர் என்று சிலரும், சமூக சீர்திருத்தவாதி என்று சிலரும், மதமாற்றத்தில் ஈடுபட்டவர் என்று சிலரும், ஸ்ரீரங்கம் கோயிலில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த வழிபாட்டு முறைகளை மாற்றியவர் என சிலரும், அவர் ஒரு வறட்டு வேதாந்தியே தவிர சிறந்த பக்திமான் அல்ல என்று சிலரும், வேத மரபுக்கே விரோதமானவர் என்று சிலரும் அவர் மனைவியைப் பிரிந்தது நியாயமல்ல என்று […]

Read more

அரங்கமா நகருளானே!

அரங்கமா நகருளானே!, வேதா டி. ஸ்ரீதரன், வேத ப்ரகாசனம் வெளியீடு, சென்னை, பக். 270, விலை 250ரூ. பூலோக வைகுந்தம் என்று வைஷ்ணவர்களால் போற்றிப் புகழப்படும் ஸ்ரீ ரங்கத்து திருக்கோவிலின் தல வரலாறு மற்றும் ஆலயம் குறித்த பல அரிய தகவல்களை தொகுத்து எளிய தமிழில் இந்நூலை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். பன்னிரு ஆழ்வார்களில் பதினோரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒரே பெருமாளாகிய அரங்கநாதர் வீற்றிருக்கும் இத்திருத்தலத்தையும், அவரின் அருமை பெருமைகளையும் பற்றி 22 தலைப்புகளில் விரியும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் பகத்ர்களுக்கு பரவசமூட்டும் வகையில் அமைந்துள்ளது. […]

Read more

தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீடு (சிசிஇ)-ஓர் அறிமுகம்

தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீடு (சிசிஇ)-ஓர் அறிமுகம், பத்மா ஸ்ரீநாத், வேதா டி.ஸ்ரீதரன், வேத ப்ரசகாசனம் வெளியீடு, சென்னை 28, பக். 220, விலை 250ரூ. மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிக்கும் வழக்கமான பாணியை வேறுவகையில் மாற்றி, அமைத்துள்ளது சி.சி.இ. என்ற தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீட்டுமுறை. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சி.பி.எஸ்.இ. இந்தத் திட்டத்தை தமிழக அரசும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய மதிப்பீட்டு முறையில் தமிழக ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு வினாக்களுக்கு விளக்கமாக விடை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெற்றோருக்கும் தனது குழந்தை கற்கும் […]

Read more

சித்தர் பாடல்கள்

சித்தர் பாடல்கள், மானோஸ், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மைலாப்பூர், சென்னை 4, விலை 200ரூ. To buy this Tamil book online  – www.nhm.in/shop/100-00-0001-432-6.html தமிழ்நாட்டு சித்தர்களான அகத்தியர், கபிலர் முதற்கொண்டு கயிலாய கம்பளிச்சட்டை முனி நாயனார் வரையிலான சித்தர்களின் பாடல்களை உள்ளடக்கிய நூல் இது. பாடல்கள் அனைத்தும் எளிய நடையில் அமைந்திருப்பதுடன், அருஞ்சொற்பொருள் விளக்கமும் நூலில் இணைக்கப்பட்டுள்ளன. இத்துடன் உரைநடையில் விளக்கப்பட்டுள்ள சித்தர் தத்துவங்கள் நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது. நன்றி: தினத்தந்தி, 11/12/13.   —-   […]

Read more