நரேந்திர மோடி என்னும் நான்

நரேந்திர மோடி என்னும் நான்…, மானோஸ், குமரன் பதிப்பகம், விலைரூ.400 பிரதமர் மோடி, இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றிப் பெற்று, பிரதமர் ஆனதை முன்னிட்டு, அவரது சாதனை பயணத்தை விரிவாக எழுதியுள்ளார். மோடியின் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், அவரது அடுத்தடுத்த திட்டங்கள், வெளிநாட்டு பயணங்களின் நோக்கம், ஊழலுக்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான அவரது திட்டங்கள் போன்றவற்றை விரிவாக, 125 அத்தியாயங்களில் எழுதியுள்ளார். – என்.எஸ்., நன்றி: தினமலர், 23/8/20. இந்தப் புத்தகத்தை […]

Read more

தத்துவ ஞானி ஜே.கே.

தத்துவ ஞானி ஜே.கே., மானோஸ், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.208, விலை180ரூ. ஜே.கே., என சுருக்கமாக அழைக்கப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு பூரண சிந்தனையாளர்; தத்துவ ஞானி. அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் இருந்தும், மாணவர்களுடன் அவர் நடத்திய உரையாடல்களில் இருந்தும் எழுந்த கருத்துக்களை அழகாகத் தொகுத்து, தத்துவ ஞானி ஜே.கே., என்று தந்திருக்கிறார் மானோஸ். உலகில், இன்று வரை நிலைத்திருக்கும் சமயங்களுக்கும், முன்னோர்களின் தத்துவ விளக்கங்களுக்கும், குருமார்களின் சடங்கு, சம்பிரதாயங்களுக்கும், அவற்றுக்கு இடையே நிகழும் முரண்பட்ட கருத்துக்களுக்கும், அதனால் எழும் குழப்பங்களுக்கும், பிரச்னைகளுக்கும் தெளிவாக விளக்கமளித்து, […]

Read more

நாலடியார் (திருக்குறளுடன் ஓர் ஒப்பிட்டுப்பார்வை)

நாலடியார் (திருக்குறளுடன் ஓர் ஒப்பிட்டுப்பார்வை), மானோஸ், ஹலோ பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ. திருக்குறள், உலகின் தலைசிறந்த நீதிநூல், அதை அடுத்து சிறந்த நீதிகளை போதிக்கும் நூல் நாலடியார். இதில் அடங்கிய பாடல்கள், சமண முனிவர்களால் இயற்றப்பட்டவை. சில கருத்துக்களை திருக்குறள், நாலடியார் ஆகிய இரு நூல்களுமே வலியுறுத்துகின்றன. அதுபற்றி “யோகாசித்தர்” என்று புகழ் பெற்ற மானோஸ் ஆராய்ந்து அதுபற்றி இந்த நூலில் அழகாக எழுதியுள்ளார். திருக்குறள், நாலடியார் ஆகிய இரு நீதிநூல்களையும் ஒன்றாக படித்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் இந்நூல் தருகிறது. மானோஸ் முயற்சி பாராட்டுக்கு […]

Read more

திட்டங்களின் நாயகன் மோடி

திட்டங்களின் நாயகன் மோடி, மானோஸ், புத்த யோகா டிரஸ்ட், விலை 150ரூ. ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகி, அரசியலில் மெல்ல மெல்ல முன்னேறி குஜராத் முதல் மந்திரி ஆனார் நரேந்திர மோடி. 2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று பிரதமரானார். அது முதல் இந்த நாள் வரை அவர் அறிவித்த திட்டங்களையும் அதன் சிறப்புகளையும் இந்த நூலில் எழுத்தாளர் மனோஸ் விரிவாக எழுதியுள்ளார். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கை ஏற்படுத்தும் திட்டமான ‘ஜன்தன் யோஜனா’, சிறுதொழில் முனைவோருக்கு கடன் […]

Read more

சித்தர் பாடல்கள்

சித்தர் பாடல்கள், மானோஸ், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மைலாப்பூர், சென்னை 4, விலை 200ரூ. To buy this Tamil book online  – www.nhm.in/shop/100-00-0001-432-6.html தமிழ்நாட்டு சித்தர்களான அகத்தியர், கபிலர் முதற்கொண்டு கயிலாய கம்பளிச்சட்டை முனி நாயனார் வரையிலான சித்தர்களின் பாடல்களை உள்ளடக்கிய நூல் இது. பாடல்கள் அனைத்தும் எளிய நடையில் அமைந்திருப்பதுடன், அருஞ்சொற்பொருள் விளக்கமும் நூலில் இணைக்கப்பட்டுள்ளன. இத்துடன் உரைநடையில் விளக்கப்பட்டுள்ள சித்தர் தத்துவங்கள் நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது. நன்றி: தினத்தந்தி, 11/12/13.   —-   […]

Read more

தீராநதி நேர்காணல்கள்

தீராநதி நேர்காணல்கள், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 216, விலை 200ரூ. தீராநதியில் வெளியான ஜெயகாந்தன், சுஜாதா, ஐராவதம் மகாதேவன், வைரமுத்து, பாலுமகேந்திரா, மாலதி மைத்ரி, உள்ளிட்ட 15 ஆளுமைகளின் நேர்காணல்களைத் தொகுத்து குமுதம் பு(து)த்தகம் நூலாக வெளியிட்டுள்ளது. பல்துறை அறிஞர்களின் துறைசார்ந்த கருத்துக்கள், அரிய தகவல்கள் என்று புதிய உலகிற்குள் நம்மை பயணிக்க வைக்கும் நூல். கலைஞனுக்கும் சமூகத்திற்குமான ஒரு உறவை ஜெயகாந்தன் நேர்காணல் நமக்கு காட்டுகிறது. தமிழின் தொன்மையை ஐராவதம் மகாதேவன் உயர்த்திப்பிடிக்கிறார். பெண், பெண்மை, […]

Read more