தத்துவ ஞானி ஜே.கே.
தத்துவ ஞானி ஜே.கே., மானோஸ், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.208, விலை180ரூ.
ஜே.கே., என சுருக்கமாக அழைக்கப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு பூரண சிந்தனையாளர்; தத்துவ ஞானி. அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் இருந்தும், மாணவர்களுடன் அவர் நடத்திய உரையாடல்களில் இருந்தும் எழுந்த கருத்துக்களை அழகாகத் தொகுத்து, தத்துவ ஞானி ஜே.கே., என்று தந்திருக்கிறார் மானோஸ்.
உலகில், இன்று வரை நிலைத்திருக்கும் சமயங்களுக்கும், முன்னோர்களின் தத்துவ விளக்கங்களுக்கும், குருமார்களின் சடங்கு, சம்பிரதாயங்களுக்கும், அவற்றுக்கு இடையே நிகழும் முரண்பட்ட கருத்துக்களுக்கும், அதனால் எழும் குழப்பங்களுக்கும், பிரச்னைகளுக்கும் தெளிவாக விளக்கமளித்து, உண்மையின் பாதைக்கு வழி சொல்கிறார் ஜே.கே., தொன்று தொட்டு நிலவி வரும் மரபுகள் உட்பட, பல்வேறு வகையான மனித வாழ்க்கைக்கு அவசியமான செயல்பாடுகள் குறித்து, 43 தலைப்புகளில் தெளிவாக கருத்துக்கள் முன் வைக்கப்பட்டிருப்பது சிறப்பாகும். குறிப்பாக, தியானம் பற்றி, 64 குறிப்புகளை சொல்லியிருப்பது பெருஞ்சிறப்பு.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026641.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினமலர், 6/5/2018.