திட்டங்களின் நாயகன் மோடி
திட்டங்களின் நாயகன் மோடி, மானோஸ், புத்த யோகா டிரஸ்ட், விலை 150ரூ.
ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகி, அரசியலில் மெல்ல மெல்ல முன்னேறி குஜராத் முதல் மந்திரி ஆனார் நரேந்திர மோடி. 2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று பிரதமரானார்.
அது முதல் இந்த நாள் வரை அவர் அறிவித்த திட்டங்களையும் அதன் சிறப்புகளையும் இந்த நூலில் எழுத்தாளர் மனோஸ் விரிவாக எழுதியுள்ளார்.
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கை ஏற்படுத்தும் திட்டமான ‘ஜன்தன் யோஜனா’, சிறுதொழில் முனைவோருக்கு கடன் வழங்கும் ‘முத்ரா திட்டம்’. இந்தியாவை உற்பத்திகேந்திரமாக மாற்ற தொடங்கப்பட்ட
‘மேன் இன் இந்தியா’ திட்டம், நாட்டை தூய்மையாக மாற்ற ‘தூய்மை இந்தியா’, நோய் வராமல் தடுக்கும் வகையில் தடுப்பூசி போட, ‘இந்திர தனுஷ்’ திட்டம், 100 நகரங்களைத் தேர்ந்தெடுத்து, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம். கருப்பு பணத்தை ஒழிக்க ‘பண மதிப்பு நீக்க நடவடிக்கை’ இப்படி பல திட்டங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டுள்ளது.
நன்றி: தினத்தந்தி, 19/4/2017.