திகம்பர நினைவுகள்

திகம்பர நினைவுகள், தேவகாந்தன், ஆதி பதிப்பகம், விலை: ரூ.120. புலம்பெயர்ந்து, தற்சமயம் கனடாவில் வசித்துவரும் எழுத்தாளரும் இதழாளருமான தேவகாந்தனின் ஈழத்து நினைவுகளின் சில பக்கங்கள் நூலாகியிருக்கின்றன. பெரிதும், பிள்ளைப் பிராயத்து நினைவுகள். புழுதியைக் கிளப்பியபடி நாளைக்கு மூன்று முறை கிராமத்துக்கு வந்து செல்லும் பேருந்து, பலிக்காமல் போன ஆரூடங்கள், நெஞ்சின் ஆழத்தில் பதிந்துவிட்ட நம்பிக்கைகள், யூரியாவின் வருகைக்கு முன்பிருந்த எரு பயன்பாடு, மிக அரிதாய் ஒரு வீட்டில் மட்டும் ஒலித்துக்கொண்டிருந்த இலங்கை வானொலியின் வர்த்தக சேவை, ‘ஓ… ரசிக்கும்சீ.. மானேவா…’ என்று சொல் பிரிந்து […]

Read more

திகம்பர நினைவுகள்

திகம்பர நினைவுகள் ,  தேவகாந்தன், ஆதி பதிப்பகம், பக்.128, விலை ரூ.120. யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பிறந்த நூலாசிரியர்,1984முதல் 2003 வரை தமிழ்நாட்டில் வாழ்ந்தார். தற்போது கனடா நாட்டில் வாழ்கிறார். என்றாலும் தான் பிறந்த மண்ணோடான அவருடைய அனுபவங்களை அவரால் மறக்க முடியவில்லை.அந்த நினைவுகளை இந்நூலில் பகிர்ந்துள்ளார். யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு வீட்டிலும் அமைக்கப்பட்டிருக்கும் கிடுகு வேலி கலாசாரத்துடன் தொடங்குகிறது நூல்.இந்தக் கிடுகுவேலிகள் மழைக்காலத்தில் மண்ணரிப்பைத் தடுப்பவையாக இருந்திருக்கின்றன. குறுகியமணல் பாதைகளின் திருப்பத்தில் செல்லும் வண்டிகள் கிடுகு வேலிகளில் மோதி, வேலி சேதமடையாமல் இருப்பதற்காக வேலியின் மூலையில் […]

Read more

யுத்தத்தின் முதலாம் அதிகாரம்

யுத்தத்தின் முதலாம் அதிகாரம், தேவகாந்தன், வடலி வெளியீடு, பக்.232, விலை ரூ.230. இன்று நடப்பவை நேற்றின் தொடர்ச்சியாகத்தான் இருக்கின்றன. ஈழத்தில் மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதும் அதற்கு விதிவிலக்கல்ல.கி.பி.1800-க்கு முன்பு யாழ்ப்பாணத்தை டச்சுக்காரர்கள் ஆண்ட காலத்தில் டச்சுப் படையினர் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும், அந்தப் படைவீரர்களை தமிழ் மக்கள் கொன்றழித்ததும் நிகழ்ந்திருக்கிறது. தமிழ் மக்களுக்கு இடையில் இருந்த சாதி மோதல்கள் பல்வேறு வகைகளில் வெளிப்பட்டுக் கொண்டே இருந்திருக்கின்றன. அது தாழ்ந்த சாதிப் பிரிவினர் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்தும் அளவுக்குச் சென்றிருக்கிறது. […]

Read more