காற்று மணல் நட்சத்திரங்கள்

காற்று மணல் நட்சத்திரங்கள், அந்த்வான் து செந்த், எக்சு பெரி, தமிழில் வெ. ஸ்ரீராம், க்ரியா, விலை 190ரூ. ‘குட்டி இளவரசன்’ தந்த எக்சு பெரியை மறக்க முடியாது. அந்த இளவரசன் கேட்ட சின்னஞ்சிறு கேள்விகளுக்கு விடை அறியாமல் விழித்திருந்தது, அருமையான காலம். எக்சு பெரி எப்போதும் மொழி மயக்கத்தில் கட்டுண்டவர் இல்லை. அவரது சுயசரிதை அடிப்டையிலேயே நாவலின் இனிய பயணம் தொடங்குகிறது. விமானங்களின் செயல்பாட்டில் இருந்த, விஞ்ஞானம் சரிவர பொருந்தி வராத காலக்கட்டத்தில் எழுதியிருக்கிறார். வானத்திலிருந்து பார்த்தால் எல்லாமே அழகு. விமானங்கள் பறக்கும்போது […]

Read more

முதல் மனிதன்

முதல் மனிதன், ஆல்பெர் காம்யு, தமிழில் வெ. ஸ்ரீராம், க்ரியா, சென்னை, விலை 270ரூ. பிரெஞ்சு இலக்கியத்தின் பெரிய ஆதர்சம் ஆல்பெர் காம்யுதான். வெகுகாலமாக வெளியிடப்படாமல் இருந்து, சமீபத்தில் முதல் மனிதன் வெளியானபோது திசையெங்கும் பெரும் அதிர்வலைகள். சித்தாந்தம் மனிதகுல முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்பதில் காம்யு எப்போதும் உறுதியாக இருந்தார். அதனால்தான் இப்போதும் அவருக்கான இலக்கிய மரியாதை, பகிர்வு அப்படியே இருக்கிறது. பிரெஞ்சிலிருந்து நேரடிமொழிபெயர்ப்பு என்பதால், தொனி கொஞ்சமும் குறையாமல் வந்திருக்கிறது. அவரின் குழந்தைப் பருவமும், எதிர்கொண்டபோரும், எதிர்ப்பும், தந்தை, தேடிச் சென்ற […]

Read more

குட்டி இளவரசன்

குட்டி இளவரசன், அந்த்வான் து செந்த் எக்சுபெரி, தமிழில் வெ. ஸ்ரீராம், ச. மதனகல்யாணி, க்ரியா வெளியீடு, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-207-9.html குழந்தைகளே உங்கள் எல்லோருக்கும் தனித்தனிக் கோள்கள் இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் வீடு அளவுக்கே இருக்கும் கோள் ஒன்றிலிருந்து, தனது காதலி ரோஜாவுடன் சண்டையிட்டுப் புறப்படுகிறான் குட்டி இளவரசன். ஒவ்வொரு கோளாக ஆறு கோள்களில் ஆறு விதமான மனிதர்களைச் சந்தித்துவிட்டு ஏழாவதாகப் பூமிக்கு வருகிறான். விமானி ஒருவரைச் சந்திக்கிறான். பெரியவர்கள் எதையுமே புரிந்துகொள்வதில்லை […]

Read more