முதல் மனிதன்
முதல் மனிதன், ஆல்பெர் காம்யு, தமிழில் வெ. ஸ்ரீராம், க்ரியா, சென்னை, விலை 270ரூ.
பிரெஞ்சு இலக்கியத்தின் பெரிய ஆதர்சம் ஆல்பெர் காம்யுதான். வெகுகாலமாக வெளியிடப்படாமல் இருந்து, சமீபத்தில் முதல் மனிதன் வெளியானபோது திசையெங்கும் பெரும் அதிர்வலைகள். சித்தாந்தம் மனிதகுல முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்பதில் காம்யு எப்போதும் உறுதியாக இருந்தார். அதனால்தான் இப்போதும் அவருக்கான இலக்கிய மரியாதை, பகிர்வு அப்படியே இருக்கிறது. பிரெஞ்சிலிருந்து நேரடிமொழிபெயர்ப்பு என்பதால், தொனி கொஞ்சமும் குறையாமல் வந்திருக்கிறது. அவரின் குழந்தைப் பருவமும், எதிர்கொண்டபோரும், எதிர்ப்பும், தந்தை, தேடிச் சென்ற பயணமும் இதில் முழு வீச்சில் காணக்கிடைக்கும். நன்றி: குங்குமம், 11/8/2014.
—-
கோடையில் ஒரு மழை, தமிழில் ச. ஆறுமுகம், ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை, பக். 152, விலை 120ரூ.
ஹிவாங்கன் வன் (கொரியன்), மோயான் (சீனா), ஜேடீஸ்மித் (இங்கிலாந்து), கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ், யான் லியாங்கே (சீனம்), ஆலிஸ் மன்றோ (கனடா) போன்றோரின் சிறுகதைகளை அழகிய தமிழில் மொழிபெயர்த்துள்ளார் ஆறுமுகம், மகிழ்ச்சி, அவலம், உன்னதம், கீழ்மை, கயமை என்று வாழ்வின் அனைத்து யதார்த்தங்களையும் இச்சிறுகதைகளுக்குள் பயணிப்போர் உணரமுடியும். உலக இலக்கியங்களை அனுபவிக்க முயல்வோருக்கு இத்தொகுப்பு மூலநூலைப் படிக்கும் உணர்வைத் தருகிறது. சற்றே பெரிய சிறுகதை என்றாலும் ஆலீஸ் மன்றோவின் மலைமேல் வந்தது கரடி தன் மனைவிக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் கணவரின் தியாகம் மனதைத் தொடுகிறது. நன்றி: குமுதம், 13/8/2014.