சிலிங்

சிலிங், கணேசகுமாரன், எழுத்து பிரசுரம், விலை: ரூ.110. ரகசியங்களின் சுரங்கம் மூன்றாவது அடுக்காக இருப்பதாகச் சொல்லப்படும் மனிதர்களின் புதைநிலை மன வன்மமானது, தமிழில் புனைவுகளாக வெளிப்பட்டது குறைவு. கோபிகிருஷ்ணன் இந்தப் புள்ளியில் தொடர்ந்து எழுதினார். மனிதர்களின் மனமானது அழுக்குகள் நிரம்பிய ஓர் இருட்டறை என்பதை நிறுவ அவர் தன்னையே பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். தொடர்ந்து இரைந்துகொண்டே இருக்கும் உள்மனத்தை அவர் இறுதிவரை எழுதிக் கடக்கவே முயன்றார். மனிதர்களின் புதைநிலை மனமானது ரகசியங்களின் சுரங்கம். ஒருவர் அதைப் பொதுவெளியில் திறந்து காட்டும்போது, அவர் இந்தச் சமூகத்திரளுக்குப் பொருத்தமற்றவர் […]

Read more

புள்ளிகள் கோடுகள் கோலங்கள்

புள்ளிகள் கோடுகள் கோலங்கள், பாரதி மணி, வம்சி புக்ஸ், பக். 600, விலை 550ரூ. தமிழ் சினிமாவில், முதல்வராக பலமுறை நடித்த பாரதி மணியைப் பற்றிய புத்தகம் இது.ஆனால் நிஜத்தில் முதல்வர்களை காட்டிலும், அதிக பலம் படைத்த அதிகார மையமாக இவர் இருந்ததை, இந்த புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. தொழிலதிபர் பிர்லாவின் செயலர். நாடக சபையின் நிர்வாகி என இவரின் பல்வேறு முகங்களை, புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது. இவர் குறித்து சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன் போன்ற பல்வேறு […]

Read more

பெருந்திணைக்காரன்

பெருந்திணைக்காரன், கணேசகுமாரன், உயிர் எழுத்து பதிப்பகம், 9, முதல் தளம், தீபம் வளாகம், கருமண்டபம், திருச்சி 1, பக்கங்கள் 88, விலை 60ரூ. ஓர் இசைக் கருவிக்குள் வாயுவாகப் புகுந்து இசையாக வெளிப்படும் காற்றைப்போல… மனதின் இண்டு இடுக்குகளில் புகுந்து உணர்வுகளை மொழி வடிவில் வெளிக்கொண்டு வருகின்றன கணேசகுமாரனின் கதைகள். பெருந்திணைக்காரன் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் 12 கதைகளும் அக மனதின் உணர்வுகளை நுட்பமாகப் பேசுபவை. இளம் வயதில் இருந்தே தனது ஆதர்ஷமாக இருந்து தன் ஆளுமையைத் தீர்மானித்த சித்தப்பா இறந்துவிட்டார். […]

Read more