அகத்திய ரகசியம்!

அகத்திய ரகசியம்!, ஸ்ரீஜா வெங்கடேஷ், ஸ்ரீபுக்ஸ் கிரியேஷன்ஸ், பக். 674, விலை 400ரூ. நுாலின் பெயரைப் பார்த்தவுடன், அகத்தியர் பற்றிய தெரியாத செய்திகள் பலவற்றைத் தொகுத்துத் தரும் நுால் என்று தோன்றும். ஆனால், கற்பனை கலந்த ஆராய்ச்சிகளை உள்ளடக்கிய நாவல் தான் அகத்திய ரகசியம். போகிற போக்கில் இந்த நாவலில் பல அறிவியல் உண்மைகளையும், மருத்துவ உண்மைகளையும் எடுத்துரைக்கிறார் நாவலாசிரியர் ஸ்ரீஜா வெங்கடேஷ். தற்கால தமிழ் நாவல் இலக்கியம் புதிய பரப்புகளில் தடம் பதிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நாவலின் நிறைவு பகுதியில், 24ம் […]

Read more

பூக்கள் விடும் தூது

பூக்கள் விடும் தூது, ஸ்ரீஜா வெங்கடேஷ், வானதி பதிப்பகம், பக். 224, விலை 100ரூ. இந்த நாவல் ஒரு வளர்ப்பு தாயின் பாசத்தையும், அவள் வாழ்வின் வேதனைகளையும் பேசுகிறது. அவள் வளர்த்த குழந்தைகளின் அன்புக்காக, தன் கடந்த கால வாழ்வை துன்ப மயமாக்கியோரை, மன்னிக்கவும் தயாராகிறாள் அந்த அன்னை. இந்த நூலில் இடம்பெறும் மற்றொரு நாவலான, காற்றோடு போராடும் பூக்கள் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வை சித்தரிக்கிறது. தந்தையின் குடிப்பழக்கத்தால், மகளின் கற்பே பறிபோகும் நிலை, அதிலிருந்து கதாநாயகி மீண்டாளா, அவளின் வாழ்க்கை லட்சியம் நிறைவேறியதா […]

Read more

மெழுகாய் கரையும் பெண்மைகள்

மெழுகாய் கரையும் பெண்மைகள், ஸ்ரீஜா வெங்கடேஷ், வானதி பதிப்பகம், பக். 288, விலை 100ரூ. ஸ்ரீஜா வெங்கடேஷின் நாவல்கள் பெரும்பாலும், சமூகம் மற்றும் குடும்பத்தில் பெண்களின் நிலை, அவர்களின் உணர்வுகள், கோபம், தியாகம் இவற்றை மையமாக வைத்தே புனையப்படுகின்றன. மெழுகாய் கரையும் பெண்கள் என்ற இந்த நாவலில், பிறந்த வீட்டுப் பாசத்தால் கணவனையும், வயிற்றில் வளரும் குழந்தையையும்கூட, பலி கொடுக்கத் துணிகிறாள், கதாநாயகி. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு நாவலான உயிரே உருகாதே. ஒரு மகளாக, மனைவியாக, தாயாக என்று எல்லா நிலைகளிலும், […]

Read more