உள்ளத்திறப்பு
உள்ளத்திறப்பு, பெரணமல்லூர் சேகரன், பக். 154, விலை 100ரூ.
22 சிறுகதைகளடங்கிய சிறுகதைத் தொகுப்பு. அரசியல் களத்தில் மக்களை முட்டாளாக்க நினைக்கு அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக அமைந்திருக்கும் ஓட்டு, வாசகர்கள் மனதில் சிகரமாக உயர்ந்து நிற்கும் எழுத்தாளரின் நிஜத்தை அறிந்தபோது மண்குதிரை ஆகிப்போன மாயமும், கடனை வாங்கி அல்லல்பட்டு வீட்டைக் கட்டினால் இல்லத்திறப்பு விழாவுக்கு வரும் சொந்த பந்தங்கள் சுலபமாக விமர்சனம் செய்துவிட்டு போகும் உள்ளத்திறப்பு, பெண்களின் நிலையையும், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் சிக்கல்களையும், வலிகளையும் சொல்லும் மீறல், கிணற்றுத் தவளைகளை வானத்துப் பறவையும், அவ்வப்போது ஆங்காங்கே குழந்தைகள் போல்வெல் துளைகளில் சிக்கி உயிரிழக்கும் அவலத்தை விவரிக்கும் ஆழ்துளை என சமூக அவலங்களை இயல்பாகவும், ஆழமாகவும் சித்தரித்துள்ளார். ஒவ்வொரு கதையும் மனதில் நிற்கும்படி அழுத்தமாகவும், அருமையாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தொகுப்பிலுள்ள கதைகளை ஆசிரியர் எழுதியிருக்கிறார் என்பதை விட பார்த்து பார்த்துச் செதுக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். உள்ளத் திறப்பு வாசகர்களை நிச்சயம் ஈர்க்கும். நன்றி: தினமணி, 25/5/2015.