ரசவாதி

ரசவாதி, பாலோ கொயலோ, தமிழில் நாகலட்சுமி சண்முகம், சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற பாலோ கொயலோவின் ‘தி அல்கெமிஸ்ட்’ நாவலை ‘ரசவாதி’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார் நாகலட்சுமி சண்முகம். ஆடு மேய்க்கும் சிறுவன் சான்டியாகோ, ஒரு புதையலைத் தேடி பிரமிடுகளை நோக்கி மேற்கொள்ளும் பயணமாக விரிகிறது இந்நாவல். இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. என்ன காரணம்? சகுனம், கனவுகள், எதேச்சை போன்ற நாம் பெரிதாகப் பொருட்படுத்தாத விஷயங்களை சான்டியாகோ தன் வெற்றிக்கான வழிகாட்டியாக எடுத்துக்கொள்கிறான். இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது; சுவாரசியமற்ற […]

Read more

சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு

சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு, யுவால்நோவா ஹராரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 499ரூ. பரிணாமத்தின் வரலாறு யுவால் நோவா ஹராரியின் ‘சேப்பியன்ஸ்’, மனித இனத்தின் சமூக, அரசியல், பொருளாதார பரிணாம வரலாற்றைப் பேசும் புத்தகம். பத்து லட்சம் பிரதிகள், முப்பது மொழிகளில் மொழியாக்கம் என்று உலகளவில் அதிகம் விற்பனையான நூல். நெருப்பு, மொழி, வேளாண்மை என்று தொடர்ந்துவந்த மனித அறிவின் பரிணாமத்தில் அடுத்தடுத்து வந்த பணமும் முதலாளித்துவமும் அறிவியலும் இன்றைக்கு மனிதர்களை எப்படி ஆட்டிப்படைக்கின்றன என்பதை வரலாற்று […]

Read more

சேப்பியன்ஸ் – மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு

சேப்பியன்ஸ் – மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு, யுவால் நோவா ஹராரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 499ரூ. 1350கோடி ஆண்டுகளுக்கு முன் ‘பெருவெடிப்பு’ காரணமாக இந்த உலகம் உருவானதாகக் கருதப்படுகிறது. பின்னர் படிப்படியாக உயிரினம் தோன்றி, அதில் இருந்து ஆதிமனிதன் உருவாகி, 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் சேப்பியன்ஸ் என்ற ஆதி மனித இனம் தோன்றியதாக ஆசிரியர் தெரிவிக்கிறார். அந்த மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி ருசிகரமாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மனித வாழ்வில் ஏற்பட்ட மதம், […]

Read more

ஏ.பி.ஜே. அப்துல்கலாம்(ஒரு வாழ்க்கை வரலாறு)

ஏ.பி.ஜே. அப்துல்கலாம்(ஒரு வாழ்க்கை வரலாறு), அருண் திவாரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 495ரூ. இந்திய வரலாற்றில் மகாத்மாவுக்குப் பிறகு மகத்தான மனிதராகப் போற்றப்பட்ட அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு. படிப்படியாக உருப்பெற்று விண்தொட்ட ஏவுகணைப்போல் வாழ்வில் படிப்படியாக உயர்ந்து அவர் சாதித்ததைச் சொல்லி இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டும் அற்புத வரலாறு. கலாமின் சீடரும் நெருங்கிய நண்பரும் அவரது நூல்கள் பலவற்றுக்கு இணை ஆசிரியருமான பேராசிரியர் அருண்திவாரி எழுதிய ஆங்கில நூலின் செம்மை குறையாத தமிழ் வடிவம். நன்றி: குமுதம், […]

Read more

ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

ஏ.பி.ஜே. அப்துல் கலாம், அருண் திவாரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங், பக். 548, விலை 495ரூ. மகாத்மா காந்திக்குப் பிறகு அதிக மரியாதைக்குரியவராக கருதப்பட்ட ஓர் இந்தியத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். அவரது வாழ்க்கை வரலாற்றை விரிவாகப் பேசும் நூல் இது. அப்துல்கலாமின் சீடரான அருண் திவாரி, கலாம் தன் வாழ்வில் எதிர்ப்பட்ட அனைத்துத் தடைகளையும் சவால்களையும் எவ்வாறு வெற்றிகரமாக கடந்தார் என்பதை இந்நூல் மூலம் உலகிற்கு அறிவுறுத்தியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஓர் இந்தியராக இருந்தார் என்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது. […]

Read more

ராமாயணம்

ராமாயணம், தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 275ரூ. சமஸ்கிருத மொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்துக்கும், தமிழில் கம்பர் எழுதிய ராமாயணத்துக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. இதுபோல், மாறுபட்ட தகவல்களுடன் வேறு சில ராமாயணங்களும் இருக்கின்றன. பல்வேறு ராமாயணங்களையும் படித்து ஆராய்ந்த தேவி வனமாலி, கேரளாவை சேர்ந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். கங்கை நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து, அங்கேயே வசித்து வருகிறார். அவர் ராமாயணத்தை ஆங்கிலத்தில் எழுதினார். பலராலும் பாராட்டப்பட்ட அந்த நூலை நாகலட்சுமி சண்முகம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். […]

Read more

என் வழி தனி வழி சச்சின் டெண்டுல்கர் சுயசரிதை

என் வழி தனி வழி சச்சின் டெண்டுகல் சுயசரிதை, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக். 545, விலை 495ரூ. உலகின் பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் 22 கெஜ நீள ஆடுகளத்தில் 24 ஆண்டுகளாக கோலோச்சிய சச்சினைப் பற்றி, ரசிகர்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அவை எல்லாம் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும் சின்னப் பயலே வீட்டிற்குச் சென்று பால் குடித்து விட்டு வா என்று சியால்கோட் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் ஏந்தியிருந்த வாசகம் உண்டாக்கிய அசௌகரியம், ஆரம்பத்தில் வாசிம் அக்ரம், வக்கார் […]

Read more

கலாமின் எனது பயணம்

ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் எனது பயணம், தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், புதுதில்லி 110002, விலை 150ரூ. கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தல் பக்ஷி லஷ்மண சாஸ்திரிகளும், போதல் பாதிரியாரும், ஜைனுலாப்தீனும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையிலும் சந்தித்து ஊர் நலனைப் பற்றிய சிந்தனைகளில் ஈடுபட்டிருந்த ஆரோக்கியமான காலங்களில் இந்தத் தேசத்தை ஆண்டு அடிமைப்படுத்தியிருந்தவர்கள் வெள்ளையர்கள்தான். ஆனால் சுதந்திர பாரதம் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டிய இன்றைய காலகட்டத்தில் அத்தகைய இணக்கமான சூழல் வெகு அரிதாகிவிட்ட அவலத்துக்குக் காரணம் சுயநல அரசியல்தான் என்பதைப் புரிந்து […]

Read more

அசுரன்

அசுரன் வீழ்த்தப்பட்டவர்களின் வீரகாவியம், ஆனந்த் நிலகண்டன், தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், போபால், விலை 395ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-247-7.html அசுரன் சொல்லும் அரசியல் கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் நீலகண்டன் ஆங்கிலத்தில் எழுதிய Asura the tale of the vanquished என்கிற நாவல், தமிழில் அசுரன் வீழ்த்தப்பட்டவர்களின் வீரகாவியம் என்ற பெயரில் மொழிபெயர்ப்பு நூலாக வெளியாகி உள்ளது. எடுத்த எடுப்பிலேயே நமக்கு உற்சாகம் அளிப்பது இதன் மொழிபெயர்ப்பு நடை. மிகவேகமாகப் படித்துச் சென்றுவிடும் அளவுக்கு […]

Read more

வி.ஐ.பிக்களின் காலேஜ் கேம்பஸ்

வி.ஐ.பிக்களின் காலேஜ் கேம்பஸ், தொகுப்பு குமுதம் டீம், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 192, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-5.html ஒரு சாதாரண மனிதனை வி.ஐ.பியாக உருவாக்கும் ஒரு களம்தான் கல்லூரிகள் என்பதை ஒவ்வொரு வி.ஐ.பி.க்களின் கல்லூரி அனுபவங்கள் மூலம் இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கல்லூரிக் காலம் என்பது இன்னொரு பிறவி எடுப்பது மாதிரி அதில் எத்தனை மாற்றங்கள், மறக்க முடியாத தருணங்கள் என்கிற வி.ஐ.பி.க்களின் அனுபவ வெளிப்பாடு நம்மை அந்தக் கல்லூரி உலகிற்குள் அழைத்துச் செல்கிறது. சோ, […]

Read more
1 2