வி.ஐ.பிக்களின் காலேஜ் கேம்பஸ்
வி.ஐ.பிக்களின் காலேஜ் கேம்பஸ், தொகுப்பு குமுதம் டீம், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 192, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-5.html
ஒரு சாதாரண மனிதனை வி.ஐ.பியாக உருவாக்கும் ஒரு களம்தான் கல்லூரிகள் என்பதை ஒவ்வொரு வி.ஐ.பி.க்களின் கல்லூரி அனுபவங்கள் மூலம் இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கல்லூரிக் காலம் என்பது இன்னொரு பிறவி எடுப்பது மாதிரி அதில் எத்தனை மாற்றங்கள், மறக்க முடியாத தருணங்கள் என்கிற வி.ஐ.பி.க்களின் அனுபவ வெளிப்பாடு நம்மை அந்தக் கல்லூரி உலகிற்குள் அழைத்துச் செல்கிறது. சோ, ஸ்டாலின், பாப்பை, சரத்குமார், இறையன்பு, கனிமொழி, வைகோ, அருணா சாய்ராம் என்று 25 வி.ஐ.பி.க்கள் தங்கள் கல்லூரி வாழ்வை, அது தங்களுக்கு கற்றுத் தந்த பாடங்களை, தங்களை வி.ஐ.பி.க்களாக உருமாற்றிய தருணங்களை சொல்லச் சொல்ல நமக்குள்ளும் ஒரு ரசாயன மாற்றம் நிகழ்கிறது. கல்லூரிகள் பற்றிய பெருமை, உடன் படித்த தோழர்கள், அரசியல் நிகழ்வுக்,ள சமகால சினிமா, கலை, ஓவியம், நடனம் என்று ஒரு காலப் பெட்டகத்தின் சுருக்கமாக இந்நூல் படிப்போர் மனதை உய்த்துணர வைக்கிறது. மொத்தத்தில் இது சாதாரண கல்லூரி நினைவுகள் அல்ல. நாம் கற்றுக்கொள்ள உதவும் பாடங்கள் இவை. நன்றி: குமுதம், 8/1/2014.
—-
எனது பயணம், ஏ.பி.ஜே. அப்துல் கலாம், தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிகேஷிங், போபால், இந்தியா, பக். 168, விலை 150ரூ.
To buy this Tamil online : https://www.nhm.in/shop/100-00-0002-206-1.html ராமேஸ்வரத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அப்துல்கலாம் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவதைக உயர எடுத்துக்கொண்ட முயற்சிகள், ஏறி வந்த படிக்கட்டுகள், இவற்றையெல்லாம் அவரே தனது வாழ்க்கைப் பயணமாக விவரித்துச் செல்கிறார். நூல் முழுதும் அவரது வாழ்வில் நிகழ்ந்த சிறிய மற்றும் பிரமாண்ட நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார். தன்னை சான்றோனாய் செதுக்கிய அத்தனை அன்புள்ளங்களையும் நன்றியோடு நினைவுகூர்கிறார். சவால்கள் நிறைந்த அப்துல்கலாமின் வாழ்க்கைப் பயணம் நமக்குக் கற்றுத் தருபவை ஏராளம். நன்றி: குமுதம், 8/1/2014