ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
ஏ.பி.ஜே. அப்துல் கலாம், அருண் திவாரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங், பக். 548, விலை 495ரூ.
மகாத்மா காந்திக்குப் பிறகு அதிக மரியாதைக்குரியவராக கருதப்பட்ட ஓர் இந்தியத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். அவரது வாழ்க்கை வரலாற்றை விரிவாகப் பேசும் நூல் இது. அப்துல்கலாமின் சீடரான அருண் திவாரி, கலாம் தன் வாழ்வில் எதிர்ப்பட்ட அனைத்துத் தடைகளையும் சவால்களையும் எவ்வாறு வெற்றிகரமாக கடந்தார் என்பதை இந்நூல் மூலம் உலகிற்கு அறிவுறுத்தியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஓர் இந்தியராக இருந்தார் என்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது.
நன்றி: குமுதம், 17/8/2016.
—-
நீலமயம், த. மாலாபிரியதர்சினி, தமிழாலயம் பதிப்பகம், பக். 96, விலை 100ரூ.
நாவலாசிரியர் பொன்னீலன் அவர்களின் எழுத்துப் பயணத்தை நேர்காணல் மூலம் எழுத்துலகிற்கு வழங்கியுள்ளார் நூலாசிரியர். அவர் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், திறனாய்வுகள் என அவர் கண்டடைந்த கலை பொக்கிசத்துடன் அவரது வாழ்க்கைப் பயணம் முழுதும் ஊடுருவிப் பாய்கிறது.
நன்றி: குமுதம், 17/8/2016.