காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 800ரூ.
இசையரசி “பாரத ரத்னா” எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை “காற்றினிலே வரும் கீதம்” என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார் எழுத்தாளர் ரமணன்.
எம்.எஸ். பாடலைக்கேட்டு மகாத்மா காந்தியும், நேருவும் பாராட்டியிருக்கிறார்கள். ஐந்து திரைப்படங்களில் மட்டுமே நடித்த எம்.எஸ். அதன் பிறகு வந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்துவிட்டு, இசைக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். 1940-ம் ஆண்டில், எம்.எஸ். சுப்புலட்சுமியும், “கல்கி” சதாசிவமும் திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பின், எம்.எஸ்.சை சிகரத்துக்கு கொண்டு சென்ற பெருமை சதாசிவத்துக்கே உரியது. இதை எல்லாம் சுவைபட எடுத்துக்கூறுகிறார், ரமணன்.
நற்பணிகளுக்கு, கச்சேரிகள் நடத்தி கோடிக்கணக்கில் வசூலித்துக் கொடுத்த சுப்புலட்சுமி, ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, மாளிகை போன்ற வீட்டை விற்றுவிட்டு, வாடகை வீட்டில் குடியேறினார் என்பதை அறியும்போது நெஞ்சம் கனக்கிறது. புத்தகத்தின் கட்டமைப்பும், அதில் இடம் பெற்றுள்ள படங்களும் பிரமிக்க வைக்கின்றன. அற்புதமான புத்தகம்.
நன்றி: தினத்தந்தி, 27/6/2016.