நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன், விகடன் பிரசுரம், விலை 165ரூ. பூச்சிக்கொல்லி விஷம், ரசாயன உரம் என்று 50 ஆண்டுகளாக இருந்த நவீன விவசாயத்தை இயற்கை வேளாண்மை நோக்கி திருப்புவதற்கான சிந்தனையை விதைத்த இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் கோ. நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாற்று நூல். தன் வாழ்நாள் முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்து, ரசாயன உரங்களுக்கு எதிராக பிரசாரம் செய்த அவர், அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இந்திய அளவில் இயற்கை வேளாண்மை வேகம் பெற்றதற்குக் காரணகர்த்தாவாக இருந்தவர். இறுதி காலம் வரை இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல், […]

Read more

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன், சீனிவாசன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 282, விலை 165ரூ. இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நம்மாழ்வர். குக்கிராமங்களிலும் கூட இயற்கை விவசாயத்தை எடுத்துச் சென்ற அவரின் வாழ்க்கை வரலாறு இந்நூல். பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் என மண்ணைக் கொல்லும் நஞ்சுகளை எதிர்த்துப் போராடியவர். மண்ணுக்கேற்ற பயிர் ரகங்களைப் பயிர் செய்வது குறித்தும், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் கால்நடைகளின் கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரித்து இயற்கை விவசாயம் செய்வது குறித்தும் இந்நூலில் அருமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வேம்பு […]

Read more

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 165ரூ. தமிழ்நிலத்தில் வேளாண் சிந்தனையை விதைத்தவர். தனது எண்ணங்களை வியாபாரப் பொருளாக மாற்றாதவர். பேச்சு வேறு, செயல் வேறு என வாழாதவர். மண்ணுக்குள் புதையும் வரை சொன்ன சொல்லுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர், பசுமைப் போராளி நம்மாழ்வார். சிலர் பேசுவார்கள். செயல்பட மாட்டார்கள். சிலர் செயல்படவும் செய்வார்கள். தான் மட்டும் இயங்கினால் போதும் என்று நினைப்பார்கள். ஆனால், நம்மாழ்வார் சிந்தித்தார், செயல்படுத்தினார். தன்னோடு சேர்ந்து ஏராளமானவர்களையும் செயல்பட வைத்தார். மறைவுக்குப் பிறகும் அவரது பச்சைத்துண்டு பசுமைப் […]

Read more