நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன், விகடன் பிரசுரம், விலை 165ரூ.

பூச்சிக்கொல்லி விஷம், ரசாயன உரம் என்று 50 ஆண்டுகளாக இருந்த நவீன விவசாயத்தை இயற்கை வேளாண்மை நோக்கி திருப்புவதற்கான சிந்தனையை விதைத்த இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் கோ. நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாற்று நூல். தன் வாழ்நாள் முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்து, ரசாயன உரங்களுக்கு எதிராக பிரசாரம் செய்த அவர், அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இந்திய அளவில் இயற்கை வேளாண்மை வேகம் பெற்றதற்குக் காரணகர்த்தாவாக இருந்தவர். இறுதி காலம் வரை இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல், விவசாயிகளின் வாழ்வுரிமைக்காக ஓய்வு இல்லாமல் உழைத்தவர். இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வாழ்ந்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை அவரே எளிய நடையில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார். இந்நூல் இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பற்றி கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு அரிய பொக்கிஷமாகத் திகழும். நன்றி: தினத்தந்தி, 19/8/2015.  

—-

நந்தாப்புகழ் பெற்ற நாயகன் நடிகமணி வி.வி. வைரமுத்து, காந்தகளம் வெளியீடு, விலை 250ரூ.

தமிழ்நாட்டில், கவிதைத் துறையில் அருஞ்சாதனை புரிந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து. அதேபோல், இலங்கையில் நடிப்புத் துறையில் பெருஞ்சாதனை படைத்தவர் நடிகமணி வி.வி. வைரமுத்து. அவர் ஏற்காத வேடமில்லை. அத்துடன் ஹார்மோனியம், மிருதங்கம், வயலின், ஜலதரங்கம், புல்லாங்குழல் முதலிய இசைக்கருவிகளையும் வாசிக்கத் தெரிந்தவர். அண்மையில் மரணம் அடைந்த அவருடைய வாழ்க்கை வரலாற்றை உள்ளத்தைத் தொடும் வண்ணம் எழுதியுள்ளார் வி.என். மதி அழகன். நன்றி: தினத்தந்தி, 19/8/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *