நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
நான் நம்மாழ்வார் பேசுகிறேன், சீனிவாசன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 282, விலை 165ரூ.
இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நம்மாழ்வர். குக்கிராமங்களிலும் கூட இயற்கை விவசாயத்தை எடுத்துச் சென்ற அவரின் வாழ்க்கை வரலாறு இந்நூல். பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் என மண்ணைக் கொல்லும் நஞ்சுகளை எதிர்த்துப் போராடியவர். மண்ணுக்கேற்ற பயிர் ரகங்களைப் பயிர் செய்வது குறித்தும், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் கால்நடைகளின் கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரித்து இயற்கை விவசாயம் செய்வது குறித்தும் இந்நூலில் அருமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வேம்பு தங்களுடையது என வெளிநாட்டினர் காப்புரிமைச் சொந்தம் கொண்டாடியபோது வேம்பு இந்திய மண்ணுக்குச் சொந்தம் என்பதை நிரூபிக்க ஜெர்மனி நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்த இந்தியக் குழு ஒன்று சென்றது. அக்குழுவில் இருந்தவர்களுள் நம்மாழ்வாரும் ஒருவர். தன் வாழ்நாள் முழுவதும் இயற்கை விவசாயத்துக்கே அர்ப்பணித்த அவர், மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்துக்காக டெல்டா மாவட்டத்தில் இருந்தபோதுதான் இயற்கை எய்தினார். இயற்கை விவசாயம் சுற்றுச்சூழல் குறித்து அறிந்து கொள்ள விரும்புவோர் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினமணி, 20/7/2015.