ஜோன் ஆஃப் ஆர்க்
ஜோன் ஆஃப் ஆர்க், தமிழில் சி. ஜெயாரதன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.
உயிருடன் எரிந்த உத்தமப் பெண்மணி என்றைக்குமே பெண்கள் பாதுகாப்பற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதிலும் போராடும் குணமுள்ளவர்களை விட்டு வைப்பார்களா என்ன? பதினைந்தாம் நூற்றாண்டில், தன்னுடைய பத்தொன்பது வயதில், பிரிட்டனுடன் மோதிப் பிரான்சு நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டான் ஜோன் ஆஃப் ஆர்க். அவளைச் சூனியக்காரி என்று முத்திரை குத்தி உயிரோடு எரித்துக் கொன்றது ஆண்களின் அதிகார வர்க்கம். பிற்காலத்தில், 1920ம் ஆண்டில் இந்தப் பெண்மணிக்குக் கிறிஸ்துவத் திருச்சபையினரால் புனிதப் பெண்மணி என்ற அங்கீகாரம் தரப்பட்டாலும் கொடுமையை மாற்ற முடியுமா? இவளுடைய போராட்ட வாழ்க்கையை ஸெயிஷ்ட் ஜோன் தலைப்பில் அருமையான நாடகமாக எழுதினார் ஜார்ஜ் பெர்னார்டு ஷா. இது (கனடா) சி. ஜெயபாரதனின் அழகான தமிழாக்கத்தில் நாடக வடிவில்லேயே நூலாக வெளிவந்திருக்கிறது. நன்றி: ஜுனியர் விகடன், 7/6/2015.