நாகரிகங்களின் மோதல்

நாகரிகங்களின் மோதல், உலக ஒழுங்கின் மறுஆக்கம், சாமுவேல் பி.ஹண்டிங்டன், தமிழில்: க. பூரணச்சந்திரன், அடையாளம் பதிப்பகம், விலை 540ரூ. அதிகாரத்திற்கும் கலாச்சாரத்திற்குமான உறவு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, முதலாளித்துவம் – கம்யூனிஸம் இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. போட்டிக்கு ஆளில்லாத நிலையில் முதலாளித்துவம் தன்னைப் பெருமுதலாளித்துவமாக வளர்த்துக்கொண்டு நிற்கிறது. ஆனாலும், பனிப்போர் காலகட்டத்தின் பதற்றமும் பகைமை உணர்ச்சிகளும் இன்னும் மறைந்துவிடவில்லை. பொருளாதாரக் கோட்பாடுகளின் இடத்தில் மத அடிப்படையிலான கலாச்சாரம் தன்னைப் பொருத்திக்கொண்டு உலக அமைதிக்கு ஊறு விளைவிக்குமோ என்ற அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. 1993-ல் […]

Read more

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு, வெண்டி டோனிகர், தமிழில் க. பூரணச்சந்திரன், எதிர் வெளியீடு, பக். 904, விலை 750ரூ. கடந்த 2014ல், இந்தியாவில் பரபரப்பைக் கிளப்பி, சர்ச்சைக்குள்ளான நூல் இது. நூலாசிரியர் வெண்டி டோனிகர், ஹார்வர்டு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில், சமஸ்கிருதம், இந்திய ஆய்வு ஆகியவற்றில் முனைவர் பட்டங்களைப் பெற்றவர். இந்த நூலில் மொத்தம் 25 இயல்கள் உள்ளன. இந்து மதம் தொடர்பான வழக்கமான நூல்களில் இருந்து, பலவிதங்களில் வேறுபட்டது என்கிறார் நூலாசிரியர். ஒன்று, இது மாற்றுக் கதையாடலை முன் வைக்கிறது. இரண்டாவது வரலாற்றின் […]

Read more

நில அமைப்பும் தமிழ்க் கவிதையும்

நில அமைப்பும் தமிழ்க் கவிதையும், தனி நாயக அடிகள், தமிழில் க. பூரணச்சந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 204, விலை 150ரூ. ஓர் இன மக்களின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் நிர்ணயிப்பதில் நிலவியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த மண்ணில் தோன்றுகின்ற கவிதை உள்ளிட்ட அனைத்துக் கலைகளும் அந்த மண்ணின் பண்பாட்டு அடையாளங்களை எடுத்துக்காட்டுவதாகவே அமைந்துள்ளன. இதற்கு தமிழ் மண்ணும் தமிழ்க் கவிதைகளும் விதிவிலக்கல்ல. எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு ஆகியவை தமிழ் மண்ணின் பண்பாட்டு அடையாளங்களை மட்டுமின்றி, அன்றைய சுற்றுச்சுசூழல் […]

Read more