நாகரிகங்களின் மோதல்
நாகரிகங்களின் மோதல், உலக ஒழுங்கின் மறுஆக்கம், சாமுவேல் பி.ஹண்டிங்டன், தமிழில்: க. பூரணச்சந்திரன், அடையாளம் பதிப்பகம், விலை 540ரூ.
அதிகாரத்திற்கும் கலாச்சாரத்திற்குமான உறவு
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, முதலாளித்துவம் – கம்யூனிஸம் இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. போட்டிக்கு ஆளில்லாத நிலையில் முதலாளித்துவம் தன்னைப் பெருமுதலாளித்துவமாக வளர்த்துக்கொண்டு நிற்கிறது. ஆனாலும், பனிப்போர் காலகட்டத்தின் பதற்றமும் பகைமை உணர்ச்சிகளும் இன்னும் மறைந்துவிடவில்லை.
பொருளாதாரக் கோட்பாடுகளின் இடத்தில் மத அடிப்படையிலான கலாச்சாரம் தன்னைப் பொருத்திக்கொண்டு உலக அமைதிக்கு ஊறு விளைவிக்குமோ என்ற அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. 1993-ல் ‘ஃபாரீன் அஃபேர்ஸ்’ இதழில் கட்டுரையாகவும் பின்பு விரிவான நூலாகவும் வெளிவந்துள்ள சாமுவேல் ஹண்டிங்டனின் நாகரிக மோதல் என்ற கருத்தாக்கம், சமகால சர்வதேச அரசியலின் பிரச்சினைகளை சமூக, வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு அணுகியுள்ளது.
அதிகாரத்துக்கும் கலாச்சாரத்துக்கும் இடையிலான உறவின் பல்வேறு பரிமாணங்களைப் பேசுகிறது.
நன்றி: தமிழ் இந்து, 11/5/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818