வீரபாண்டிய கட்டபொம்மன் சில நிகழ்வுகளின் பதிவுகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் சில நிகழ்வுகளின் பதிவுகள், இதயவேந்தன் வாசகர் வட்டம், சென்னை, விலை 135ரூ. சிவாஜிகணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் முதலில் நாடக மேடையிலும் பிறகு வெள்ளித்திரையிலும் மாபெரும் சாதனை படைத்தது. அப்போது நடந்த விழாக்கள், தலைவர்களின் புகழாரங்கள், பத்திரிகை விமர்சனங்கள், சுவையான நிகழ்ச்சிகள் ஆகியவற்றை சிறப்பாகத் தொகுத்து, இந்தப் புத்தகத்தை உருவாக்கியுள்ள எஸ்.கே. விஜயன் பாராட்டுக்கு உரியவர். நிறைய படங்கள், அழகுக்கு அழகு சேர்க்கின்றன. சிவாஜி ரசிகர்கள் மட்டுமல்ல, எல்லோரும் படித்து ரசிக்கலாம். நன்றி: தினத்தந்தி, 15/7/2015.   —- நேர்மைக்கு கிடைத்த […]

Read more

சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்

சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. மருத்துவக் கல்லூர மாணவர் நாவரசுவை சக மாணவர் ஜான் டேவிட் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்தார். இந்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு கடலூர். அமர்வு நீதிமன்றம் இரண்டு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஜான்டேவிட் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர். இது குறித்து ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்டார், செந்தமிழ் கிழார். இதனால் […]

Read more

டாவின்சி கோட்

டாவின்சி கோட், டான் பிரவுன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, விலை 599ரூ. புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. பாரிஸ் நகர அருங்காட்சியகத்தில் பணிபுரியும் ஜாக்குவஸ் மர்மமான முறையில் தாக்கப்படுகிறார். அவர் இறக்கும் முன், தனது வயிற்றில் சில சின்னங்களையும் ரகசிய எண்ணங்களையும் ரத்தம் கொண்டு எழுதிவைத்து இறக்கிறார். இதனைத் தொடர்ந்து வரும் பரபரப்பான சம்பவங்கள், புதிர்கள், மர்மங்கள் ஆகியவற்றோடு சில வரலாற்று சான்றுகளாலும் சுவாரசியமாக பின்னப்பட்டுள்ள இந்த நாவல், உலகம் முழுவதும் பாராட்டுக்களையும் பலத்த எதிர்ப்புகளையும் ஒரு சேரக் குவித்து சாதனை படைத்தது. […]

Read more