சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.
மருத்துவக் கல்லூர மாணவர் நாவரசுவை சக மாணவர் ஜான் டேவிட் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்தார். இந்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு கடலூர். அமர்வு நீதிமன்றம் இரண்டு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஜான்டேவிட் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் ஜான் டேவிட்டை விடுதலை செய்தனர். இது குறித்து ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்டார், செந்தமிழ் கிழார். இதனால் நீதிமன்ற அவதூறு வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறைத்தண்டை விதிக்கப்பட்டது. தண்டனைக் கைதியாக அவர் சென்னை மற்றும் வேலூர் சிறையில் கழித்த நாட்களையும், அனுபவங்களையும் சுவைபட சொல்கிறார். மேலும் குற்றவாளிகள் எப்படி உருவாகிறார்கள். அவர்களைத் திருத்துவதற்கு என்ன வழி என்பதையும் எடுத்துக் கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 24/6/2015.
—-
இராமாயணத்தில் மானிடரல்லாத பேரன்பர்கள், தெய்வீகா பதிப்பகம், விலை 100ரூ.
கம்ப ராமாயணத்தில் இடம் பெற்றுள்ள மனிதர்கள் அல்லாத பாத்திரங்கள்ன அனுமான், வாலி, சுக்ரீவன், சடாயு, சம்பாதி, காமதேனு, கருடன் என 27 பாத்திரங்களை ஆய்வு செய்துள்ளார் நூலாசிரியர் கவிஞர் மயிலை மா. சந்திரா. ராமாயணத்தில் மனித பாத்திரங்களுக்கு இணையாக கம்பர் படைத்த விலங்கியல் பாத்திரங்களை நூலாசிரியர் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தியிருப்பது பாராட்டத்தக்க முயற்சி. நன்றி: தினத்தந்தி, 24/6/2015.