டாவின்சி கோட்
டாவின்சி கோட், டான் பிரவுன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, விலை 599ரூ.
புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. பாரிஸ் நகர அருங்காட்சியகத்தில் பணிபுரியும் ஜாக்குவஸ் மர்மமான முறையில் தாக்கப்படுகிறார். அவர் இறக்கும் முன், தனது வயிற்றில் சில சின்னங்களையும் ரகசிய எண்ணங்களையும் ரத்தம் கொண்டு எழுதிவைத்து இறக்கிறார். இதனைத் தொடர்ந்து வரும் பரபரப்பான சம்பவங்கள், புதிர்கள், மர்மங்கள் ஆகியவற்றோடு சில வரலாற்று சான்றுகளாலும் சுவாரசியமாக பின்னப்பட்டுள்ள இந்த நாவல், உலகம் முழுவதும் பாராட்டுக்களையும் பலத்த எதிர்ப்புகளையும் ஒரு சேரக் குவித்து சாதனை படைத்தது. ஆங்கில நாவலில் உள்ள விறுவிறுப்பு சற்றும் குறையாமல், தமிழிலேயே எழுதியது போன்று சரளமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதால், வாசகர்களை ஈர்ப்புடன் படிக்கத் தூண்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 17/6/2015.
—-
என் மன வானில், தெய்வீகா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
நூலாசிரியர் கவிஞர் செம்போடை வெ. குணசேகரனின் புதுக்கவிதைகளின் தொகுப்பு. நறுக்கு கவிதைகள் மனதைத் தொடுகின்றன. நன்றி: தினத்தந்தி, 17/6/2015.