வானொலிக் கதைகள்

வானொலிக் கதைகள், தளவை மா.சவுந்தரராசன், அருள்மொழி பிரசுரம், பக். 320, விலை 220ரூ. இலங்கை சர்வதேச வானொலியில், ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஒலிபரப்பாகிய, ‘வெற்றிப்பாதை’ நிகழ்ச்சியில் வாசிப்பட்டு, நேயர்களின் வரவேற்பை பெற்றது. அறிவிப்பாளர், பி.எச்.அப்துல் ஹமீதின் குரல்வளத்தில் வாசிக்கப்பட்ட இந்த சிறுகதைகள், இப்போது வாசகர்களின் பார்வைக்கு நூலாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. நன்றி: தினமலர்,6/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027124.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கலாங்காதிரு பெண்ணே

கலாங்காதிரு பெண்ணே, விகடன் பிரசுரம், விலை 105ரூ. பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும் கூறுகின்ற புத்தகம் இது. குறிப்பாக “தாய்மை” என்ற பகுதியில் பெண்கள் கர்ப்பம் தரித்தது முதல், குழந்தை பிறப்பது வரை எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பது விரிவாக விவரிக்கப்படுகிறது. தற்காலத்தில் ‘சிசேரியன்’ ஆபரேஷன் செய்துகொள்வதை பல பெண்கள் விரும்புகிறார்கள். அந்த ஆபரேஷனை எப்போது செய்துகொள்ளலாம், எப்போது செய்து கொள்ளக் கூடாது என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. எல்லாப் பெண்களும் படித்துத் தெரிந்த கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைந்துள்ளன. […]

Read more

உள்முகமாய் ஒரு பயணம்

உள்முகமாய் ஒரு பயணம், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. தியானக் கூடங்களில் தனது சீடர்கள் மற்றம் நண்பர்களுக்கு, ஓஷோ வழங்கிய உரைகளின் தொகுப்பு நூல். காலையும் மாலையும் மேற்கொள்ளும் தியான வழிமுறைகளை ஒஷோ வரையறுத்து தந்துள்ளார். மனக்கசடுகள் நீங்கும்போதுதான் மனத்தூய்மை தென்படும் என்பது அவரது போதனை. தூசி படிந்த கண்ணாடியாய் மனம் இருக்கக்கூடாது. அது, துடைக்கப்பட்ட பளபளப்பான கண்ணாடியாய் ஆக வேண்டும். அப்போதுதான் அதில் இறைமை பளபளவென்று பிரதிபலிக்கும் என்கிறார் ஓஷோ. பல குட்டிக் கதைகளை புத்தகமெங்கிலும் தூவி, ஆழ்நிலை வாழ்க்கை வாழத் […]

Read more

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள், அருள்மொழி பிரசுரம், சென்னை, விலை 110ரூ. எளிமையாகவும், இனிமையாகவும் சுவாரஸ்யமாகவும் விக்கிரமாதித்தன் கதைகளை எழுதியுள்ளார் கள்ளிப்பட்டி சு. குப்புசாமி. நன்றி: தினத்தந்தி, 27/5/2015   —-   வழக்கறிஞராக என் அனுபவங்கள், சந்திராமணி பதிப்பகம், திருவண்ணாமலை, விலை 140ரூ. இந்நூலை இளம் வழக்கறிஞர்களின் வளமான வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டி நூலாக படைத்திருக்கிறார் வழக்கறிஞர் பா. பழனிராஜ். நன்றி: தினத்தந்தி, 27/5/2015   —-  வியப்பூட்டும் விடுகதைகள் 1000, சங்கர் பதிப்பகம், சென்னை, விலை 35ரூ. சிந்திக்க தூண்டும் வகையில் 1000 விடுகதைகள் […]

Read more