பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே
பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே, வி. நடராஜன், சாந்தா பப்ளிஷிர்ஸ், சென்னை, பக். 336, விலை 200ரூ.
குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை எப்படி வளர்க்க வேண்டும்? என்று வழிகாட்டும் நூல். குழந்தைகளின் நல்ல வளர்ச்சிக்கு அவர்களுக்கு சிறந்த சூழ்நிலை அமைய வேண்டும். அந்தச் சூழ்நிலையைப் பெற்றோரே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வளரும் காலத்தில் தன்னுடன் பிறந்தவர்களுடன் குழந்தைகள் சண்டை போடுவார்கள். சாப்பிட மாட்டார்கள். எந்தப் பொருளையும் உடைத்துவிடுவார்கள். சில குழந்தைகள் பிற குழந்தைகளுடன் நன்றாகப் பழக மாட்டார்கள். பெரியவர்களின் கவனத்தைத் தன்பால் ஈர்ப்பதற்காக தேவையில்லாத செயல்களில் ஈடுபடுவார்கள். சிணுங்குவார்கள். எல்லாப் பொருட்களையும் தன்னுடையது என்பார்கள். கோபம் வந்தால் யாரையாவது அடிப்பார்கள். பெரியவர்களின் துணையில்லாமல் தானே எல்லாவற்றையும் செய்வதற்காக அடம் பிடிப்பார்கள். குழந்தைகளின் இவ்வாறான பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் பெற்றோர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை மிகத் தெளிவாக இந்நூல் விளக்குகிறது. குழந்தைகளின் வளர்ச்சியை சோதித்து ஆராய்வதற்கப் பயனுள்ள பின் இணைப்புகளும் தரப்பட்டுள்ளன. நன்றி: தினமணிஇ, 15/6/2015.