பிரமபுரம் மேவிய பெம்மான்

பிரமபுரம் மேவிய பெம்மான், ஆசிரியர் : அன்பு ஜெயா, வெளியீடு: காந்தளகம். ஈழத் தாயகத்தில் பிறந்த அன்பு ஜெயா, மருந்தியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று, மருந்து தயாரிப்பு நிறுவன உயர் பொறுப்புகளில், 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சிட்னி பாலர் மலர் தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர், முதல்வர், மக்கள் தொடர்பு அலுவலர் போன்ற பொறுப்புகளில் நற்பணியாற்றியவர். தமிழ்ப் புலமை மிக்க பன்னுால் ஆசிரியர். ஆஸ்திரேலியா கம்பன் கழகம் வழங்கிய தமிழ்ச்சான்றோர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர். பிரமபுரம் சீகாழித் தலத்தையும், பெம்மான் சிவனையும் குறித்த சொற்கள் […]

Read more

பிரமபுரம் மேவிய பெம்மான்

பிரமபுரம் மேவிய பெம்மான்,  அன்பு ஜெயா, காந்தளகம், பக்.272, விலை ரூ.200. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் புகழ்பெற்றது – பிரமபுரம், தோணிபுரம், காழி, கழுமலம், சீகாழி என்றெல்லாம் போற்றப்படும் சீர்காழி திருத்தலம். சைவத்துக்கு மட்டுமல்லாமல் வைணவத்துக்கும் பெருமை சேர்த்த சிறப்பு இவ்வூருக்கு உண்டு. இத்திருத்தலத்திற்குக் காரணப் பெயர்களாக 12 பெயர்கள் உள்ளன. இப்பன்னிரண்டு திருப்பெயர்களும் பன்னிரண்டு யுகங்களில் விளங்கி வந்த பெயர்கள் என்று பட்டினத்தடிகள் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். வேதநெறி தழைத்தோங்கவும், சைவம் மேன்மை கொள்ளவும் அவதரித்த திருஞானசம்பந்தரால் புகழ் பெற்றது […]

Read more