பிரமபுரம் மேவிய பெம்மான்
பிரமபுரம் மேவிய பெம்மான், அன்பு ஜெயா, காந்தளகம், பக்.272, விலை ரூ.200. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் புகழ்பெற்றது – பிரமபுரம், தோணிபுரம், காழி, கழுமலம், சீகாழி என்றெல்லாம் போற்றப்படும் சீர்காழி திருத்தலம். சைவத்துக்கு மட்டுமல்லாமல் வைணவத்துக்கும் பெருமை சேர்த்த சிறப்பு இவ்வூருக்கு உண்டு. இத்திருத்தலத்திற்குக் காரணப் பெயர்களாக 12 பெயர்கள் உள்ளன. இப்பன்னிரண்டு திருப்பெயர்களும் பன்னிரண்டு யுகங்களில் விளங்கி வந்த பெயர்கள் என்று பட்டினத்தடிகள் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். வேதநெறி தழைத்தோங்கவும், சைவம் மேன்மை கொள்ளவும் அவதரித்த திருஞானசம்பந்தரால் புகழ் பெற்றது […]
Read more