ரெய்கி எனும் மருந்தில்லா மருத்துவம்

ரெய்கி எனும் மருந்தில்லா மருத்துவம், எஸ்.ஜி.ஜெயராமன், பக்.196, விலை ரூ.195. படைப்பு ஆற்றல்களாக விளங்கும் குண்டலினி, ஜீவசக்தி, பிராண சக்தி ஆகிய மூன்றும் ஒன்று கூடி மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான ஆதார ஆற்றல்களாக விளங்குகின்றன. இந்த மூன்று ஆற்றல்களும் மனித உடலில் முறையாகச் செயற்படும்போது மனிதர்களை நோய்கள் நெருங்குவதில்லை. ஆனால் இந்த ஆற்றல்கள் மனிதர்களுக்கு தேவையான அளவு கிடைக்கவில்லை என்றால் நோய் வாய்ப்படுவார்கள். அப்போது  பிரபஞ்சத்தில் உள்ள உயிராற்றல்களை மனித உடல் தன்னுள் ஈர்த்துக் கொண்டால், நோய்களிலிருந்து விடுபட முடியும். இதற்கான வழிகளை புத்தரின் கடைசிப் […]

Read more

செட்டிநாட்டு சுற்றுலாவும் சிவகங்கை மாவட்ட பிரசித்தி பெற்ற திருத்தலங்களும்

செட்டிநாட்டு சுற்றுலாவும் சிவகங்கை மாவட்ட பிரசித்தி பெற்ற திருத்தலங்களும் (ஒரு சுற்றுலா வழிகாட்டி),  எஸ்.எல்.எஸ். பழனியப்பன், எஸ்.எல்.எஸ். பதிப்பகம், பக்.88. விலைரூ.60. நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்ந்த 96 கிராமங்களுக்கு செட்டிநாடு என்ற பொதுப்பெயர் உண்டு.செட்டி நாடு என்று சொன்னால்  ஒரு தெரு முதல் மறு தெரு வரை நீண்டிருக்கும் செட்டிநாடு பங்களாக்கள்தாம் நினைவுக்கு வரும். கானாடு காத்தான், காரைக்குடி, ஆத்தங்குடி, கோட்டையூர், பள்ளத்தூர், கடியாபட்டி உள்ளிட்ட 76 ஊர்களில் அத்தகைய கட்டடங்கள் இருக்கின்றன. செட்டி நாடு பகுதியில் உள்ள இளையாத்தங்குடி, இரணியூர், பிள்ளையார் பட்டி, வைரவன் […]

Read more

சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்

சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம், மு.அங்கமுத்து, அனுராதா பதிப்பகம், பக்.144, விலை ரூ.110 வருமானம் என்றால் என்ன?  வருமான வரி விலக்கு எவற்றுக்கெல்லாம் உள்ளது? என்பதை மிக விரிவாக, துல்லியமாக விளக்கும் நூல். மாதச் சம்பளம் பெறும் ஒருவருக்குத் தரப்படும் விடுப்புப் பயணச் சலுகை, வீட்டு வாடகைப்படி, கல்வி உதவித்தொகை, அவ்வப்போது தரப்படும் பரிசுகள், வெகுமதிகள் போன்றவற்றுக்கு வருமான வரிச் சலுகைகள் உண்டா? பணியிலிருந்து விலகிய ஒருவர் பெறும் கிராஜுவிட்டி, ஈட்டிய விடுப்பு நாள்களுக்குப் பெறும் தொகை, ஆள்குறைப்பின் காரணமாக வேலையிலிருந்து விலகியிருந்தால் அதற்காக வழங்கப்படும் […]

Read more

மருந்தில்லா சிகிச்சை முறைகள்

மருந்தில்லா சிகிச்சை முறைகள், ஜி.லாவண்யா, நர்மதா பதிப்பகம், பக்.160, விலை ரூ.100. மருந்தில்லாத மருத்துவமுறைகள் என்று சொன்னவுடன் தொடுசிகிச்சை, வர்ம சிகிச்சை போன்றவைதாம் நினைவுக்கு வரும். ஆனால் இந்நூலில் உணவு சிகிச்சை, சூரியக்குளியல், நீர் சிகிச்சை, மண் சிகிச்சை,பிரபஞ்ச சக்தி சிகிச்சை, யோகாசன சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நறுமண திரவ சிகிச்சை, இசை சிகிச்சை ஆகிய மருந்தில்லாத சிகிச்சை முறைகள் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. நாடி பரிசோதனை மூலமாக ஒருவருடைய உடல்நிலையைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்கிறார் நூலாசிரியர். அறுசுவை உணவுகளைப் பற்றியும், […]

Read more

குறள் காட்டும் விலங்கு பறவைகள்

குறள் காட்டும் விலங்கு பறவைகள், பீ.ஜோசி அபர்ணா, திருவள்ளுவர் புத்தக நிலையம். திருக்குறளைப் பலரும் பலவித மாக ஆராய்ந்து இருக்கின்றனர். ஆனால், இந்த நுாலின் ஆசிரியரான பள்ளி மாணவி, ஜோசி அபர்ணா, வித்தியாச மான கோணத்தில் திருக்குறளைப் பார்த்திருக்கிறார் என்றால், அது மிகையாகாது. திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்து தேடிப் பிடித்து, இந்த நுாலை எழுதியிருக்கிறார். வெறுமனே விலங்குகள், பறவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று பட்டியல் மட்டும் தராமல், அவற்றின் குணநலன்கள், மனிதனுக்கு அவை எப்படி பொருந்துகிறது என்பதையும் விளக்கி இருக்கிறார்.நுாலின் பிற்பகுதியில், […]

Read more

செம்மொழிகளின் வரிசையில் தமிழ்

செம்மொழிகளின் வரிசையில் தமிழ், ஜி.ஜான் சாமுவேல், முல்லை நிலையம், பக்.172, விலை ரூ.120. தொன்மை, தனித்தன்மை, பலமொழிகளுக்கும் தாயாக அமைந்த தன்மை, நாகரிகம் மேம்பாடு அடைந்த ஓர் இனத்தின் பண்பாடு, கலை, அனுபவ உணர்வுகளின் முழுவெளிப்பாடாக அமைந்த இலக்கியங்களைப் பெற்றிருத்தல், தனித்து இயங்கும் ஆற்றல், தனித்தன்மை வாய்ந்த உயர்ந்த கலை, இலக்கிய வெளிப்பாடுகள், தனிச்சிறப்பான மொழிக் கோட்பாடுகள் கொண்டிருக்கும் ஒரு மொழி செம்மொழியாகக் கருதப்படும். தமிழுக்கு அந்தத் தன்மைகள் எல்லாம் எவ்வாறு இருக்கின்றன என்பதை இந்நூல் விளக்குகிறது. வெறும் இலக்கியமொழியாக மட்டுமல்லாமல், நாட்டுப்புற இலக்கிய […]

Read more

பச்சைப்புடவைக்காரி

பச்சைப்புடவைக்காரி, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 328, விலை 300ரூ. பக்தர்களின் பக்தியை அளவிடுகிறாள் பச்சைப்புடவைக்காரியாக வலம் வரும் மதுரை அன்னை மீனாட்சி. அவளின் தராசில் கடமைகளும், பொறுப்புகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அளவுகோல் இருக்கிறது. அதை எப்படித் தெரிந்து கொள்வது என வழிகாட்டுகிறார் ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. மனித முயற்சியால் முடிந்த அளவு செய்துவிட்டு பின், அதன் பலனை இறைவனிடம் விட்டுவிடுவதே சரியான பக்தி. இத்தகைய பக்தியை தான் அன்னை மீனாட்சி விரும்புவதாக ஆசிரியர் தன் பக்கங்களில் தன்னம்பிக்கை விதையை விதைத்துக் […]

Read more

மனைவி அமைவதெல்லாம்

மனைவி அமைவதெல்லாம், தொகுப்பாசிரியர்: சி.வீரரகு, சத்யா பதிப்பகம், பக்.200, விலை ரூ.150. மனிதன் உயிர் வாழ்வதற்கு காற்று, தண்ணீர் மிகவும் அவசியம். அதுபோல் ஒரு குடும்பம் நிலைக்க, சிறக்க, மனைவி என்னும் திறவுகோல் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் சாதனை நிகழ்த்திய ஓர் ஆணின் பின் அவருடைய மனைவி இருப்பதை விரிவாக எடுத்துரைக்கும்நூல். இல்லறம் நல்லறமாக கணவன்- மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் நூலாசிரியர், திருவள்ளுவருக்கு வாசுகி, பாரதிக்கு செல்லம்மாள், காந்தியடிகளுக்கு கஸ்தூரிபாய், நேருவுக்கு கமலா உட்பட பல இணையர்கள், ஒருவர் […]

Read more

திருக்குறள் ஆன்மிக உளவியல் உரை

திருக்குறள் ஆன்மிக உளவியல் உரை, பேரா.அர.வெங்கடாசலம், பழனியப்பா பிரதர்ஸ், பக். 432, விலை 385ரூ. திருக்குறளில், அரசியல், பொருளியல், சமயம், மெய்ப்பொருளியல், அளவையியல், மருத்துவ இயல், உளவியல், உழவியல் முதலான பல்துறைப் புலமைக் கூறுகளையும் திருவள்ளுவர் பதிவு செய்துள்ளார். ஆன்மிகம் என்பதை நடுநிலையோடு விளக்கி, உளவியல் என்ற அறிவியல் சார்ந்த அனுபவத்தோடு ஆன்மிக உளவியல் நோக்கில் உரை கண்டுள்ளார், நுாலாசிரியர். சில குறட்பாக்களுக்கு, தான் கருதும் மாற்றுப் பொருளையும் வழங்கி, பின் ஆன்மிகம் சார்ந்த உளவியல் உரையை ஆய்வுரையாகத் தந்துள்ளார். ‘ஆன்மா’ என்னும் சொல்லை […]

Read more

மண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்

மண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள், மு.முருகேஷ், ஆநி, விலை 40ரூ. நாட்டுப்புற இலக்கிய வடிவங்களில் முன்னைப் பழமைக்கும், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்குவது விடுகதை.ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியரே, ‘பிசி’ என்ற சொல்லால் விடுகதையைச் சுட்டியுள்ளார். மூத்த தமிழறிஞர்களான, ச.வே.சுப்பிரமணியன், ஆறு.ராமநாதன் ஆகியோர் வரிசையில் முருகேஷும் சேர்ந்துள்ளது பாராட்டுக்குரியது. ‘மண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்’ என்னும் தலைப்பில், அறிவுக்கு விருந்தாகும், 180 விடுகதைகளைத் தொகுத்துள்ளது, இந்நுாலுக்கு சிறப்பு சேர்க்கிறது. நன்றி: தினமலர் இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more
1 2 3 4 5 8