சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்
சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம், மு.அங்கமுத்து, அனுராதா பதிப்பகம், பக்.144, விலை ரூ.110
வருமானம் என்றால் என்ன? வருமான வரி விலக்கு எவற்றுக்கெல்லாம் உள்ளது? என்பதை மிக விரிவாக, துல்லியமாக விளக்கும் நூல்.
மாதச் சம்பளம் பெறும் ஒருவருக்குத் தரப்படும் விடுப்புப் பயணச் சலுகை, வீட்டு வாடகைப்படி, கல்வி உதவித்தொகை, அவ்வப்போது தரப்படும் பரிசுகள், வெகுமதிகள் போன்றவற்றுக்கு வருமான வரிச் சலுகைகள் உண்டா? பணியிலிருந்து விலகிய ஒருவர் பெறும் கிராஜுவிட்டி, ஈட்டிய விடுப்பு நாள்களுக்குப் பெறும் தொகை, ஆள்குறைப்பின் காரணமாக வேலையிலிருந்து விலகியிருந்தால் அதற்காக வழங்கப்படும் ஈட்டுத் தொகை, ஓய்வூதியத் தொகை ஆகியவற்றுக்கு வருமான வரி உண்டா?
வீடுகளைக் கட்டி வாடகைக்குவிட்டால் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு எவ்வாறு வருமான வரி விதிக்கப்படும்? வழக்கறிஞர், டாக்டர், ஆடிட்டர், திரைப்படக் கலைஞர் போன்ற தொழில் சார்ந்த சேவை செய்து பெறும் வருமானத்திற்கான வரி என்பன போன்ற பல கேள்விகளுக்குத் தெளிவாக விடையளிக்கும் நூல்.
நன்றி: தினமணி, 16/9/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027079.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818