பூதங்களின் கதை

பூதங்களின் கதை, சிவ.விவேகானந்தன், காவ்யா, விலை 480ரூ. பூதங்களின் கதை என்ற தலைப்பைப் பார்த்ததும், இது திகிலும் திகைப்பும் நிறைந்த கதைகளின் தொகுப்பு என்று நினைத்துவிடத் தேவையில்லை என்பதை இதில் உள்ள இரண்டு கதைகளும் உணர்த்துகின்றன. தமிழகத்தில் பழங்காலம் முதலே பூதங்களின் வழிபாடு நடைமுறையில் இருக்கிறது என்பதையும், பல கோவில்களில் பல்வேறு பெயர்களில் பூத உருவங்கள் இடம் பெற்று இருக்கின்றன என்பதையும் இந்த நூல் ஆய்வு நோக்கில் தந்து இருக்கிறது. தென் மாவட்டங்களில் வழங்கும் பூத கதைப் பாடல்களில் பூதப்பெருமாள் கதை (ஈஸ்வரகாலப் பூதக்கதை), […]

Read more

காவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம்

காவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம், சக்தி கதிரேசன், மணிமேகலைப் பிரசுரம், சக்தி கதிரேசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 200ரூ. தமிழகம் கர்நாடகம் இடையேயான காவிரி நீர் பங்கீடு, நமக்குக் கிடைக்கும் காவிரி நீரை எவ்வாறு சேதாரம் இல்லாமல் செலவு செய்து அதிக மகசூல் பெறுவது என்பவற்றை ருசிபடக் கூறுவதற்காக நாவல் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூல், காவிரி நீர் தொடர்பான அத்தனை தகவல்களையும் தருகிறது. இந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய காவிரி நீர் மேலாண்மைத் திட்டங்கள் மூலம் அதிக நீரை பாதுகாத்து, […]

Read more

காவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம்

காவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம், சக்தி கதிரேசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 200ரூ. தமிழகம் கர்நாடகம் இடையேயான காவிரி நீர் பங்கீடு, நமக்குக் கிடைக்கும் காவிரி நீரை எவ்வாறு சேதாரம் இல்லாமல் செலவு செய்து அதிக மகசூல் பெறுவது என்பவற்றை ருசிபடக் கூறுவதற்காக நாவல் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூல், காவிரி நீர் தொடர்பான அத்தனை தகவல்களையும் தருகிறது. இந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய காவிரி நீர் மேலாண்மைத் திட்டங்கள் மூலம் அதிக நீரை பாதுகாத்து, நீலகிரி காவிரி திட்டம் மற்றும் […]

Read more

ஆரிமில்லரின் காமிராவில் கைவண்ணம்

ஆரிமில்லரின் காமிராவில் கைவண்ணம், தமிழில்: எஸ்.எம்.கார்மேகம், முல்லை பதிப்பகம், பக்.96, விலை ரூ.30 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 37 ஆண்டுகள் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியவர் ஹாரி மில்லர். அவர் புகைப்படக் கலை தொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய தொடர், தமிழில் தினமணி கதிர் இதழில் 26.3.1995 முதல் 1.6.1995 வரை வெளிவந்தது. அதனுடைய நூல் வடிவம்தான் இந்நூல். விலை உயர்ந்த காமிராவை வைத்து ஒருவர் நல்ல புகைப்படங்களை எடுத்துவிட முடியாது. நல்ல புகைப்படம் எடுக்க புகைப்படம் எடுப்பவர் காமிராவை எப்படிக் கையாள வேண்டும் என்று […]

Read more

ஹிதோப தேசத்தில் நிர்வாகம்

ஹிதோப தேசத்தில் நிர்வாகம், நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெய்ன் பேங்க் வெளியீடு, பக். 160, விலை 100ரூ. தமிழகத்தின் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான இந்நூலாசிரியர், கலை, இலக்கியம், ஆன்மிகம் போன்ற துறைகளிலும் நாட்டம் கொண்டவர். வாழ்வியல், வணிகவியல், நிர்வாகவியல் பற்றிய நூல்கள், மகாகவி பாரதியார், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற மகான்களைப் பற்றிய நூல்கள் என்று நல்வழிகாட்டக்கூடிய 50-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். அந்த வகையில் அமைந்துள்ளதே இந்நூலும். ஹிதம் என்றால் மென்மையான என்றும், உபதேசம் என்றால் அறிவுரை என்றும் பொருள். […]

Read more

கங்காபுரம்

கங்காபுரம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 450ரூ. சோழ சாம்ராஜ்யத்தின் தன்னிகரில்லாத பேரரசனாகவும், தந்தையை மிஞ்சிய தனயனாகவும் விளங்கிய மன்னர் ராஜேந்திரன் மனதில் வெகு காலமாக நிலை கொண்டு இருந்த வேதனையைச் சுற்றி இந்த சரித்திர நாவல் படைக்கப்பட்டு இருக்கிறது. தந்தை ராஜராஜனுக்காக நாட்டின் பல பகுதிகளுக்கும் படை நடத்திச் சென்று, வெற்றியை மட்டுமே ஈட்டித் தந்த ராஜராஜன், இளவரசு பட்டத்திற்காக தனது 50 வயது வரை காத்து இருக்க நேரிட்ட வரலாற்று நிகழ்வையும், அது குறித்து அந்த மன்னரின் உள்ளக்கிடங்கில் குவிந்து கிடந்த […]

Read more

கல்கியின் பொன்னியின் செல்வன்

கல்கியின் பொன்னியின் செல்வன், நாடக வடிவம், சக்தி வெங்கடாசலம் வயிரவன், முல்லை பதிப்பகம், பக். 296, விலை 200ரூ. அமரர் கல்கியின் படைப்புகளில் தலைசிறந்தது ‘பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுக் கதை. அதன் இலக்கிய ஆழமும், கற்பனை வீச்சும், வண்ணத் தமிழும் படிப்பவர்களை பரவசப்படுத்தும். 2400 பக்கங்களைக் கொண்ட 5 பாகங்களான அந்த நாவலை, 296 பக்கங்களில் நாடக வடிவில் தந்துள்ளார் இந்நூலாசிரியர். இவர் இயல், இசை, நாடகத்தின் மீது பற்றுக் கொண்டு, தனது கல்லூரி நாட்களிலேயே நாடகங்களை எழுதி இயக்கும் ஆற்றலைப் பெற்றவர். […]

Read more
1 6 7 8