ஹிதோப தேசத்தில் நிர்வாகம்

ஹிதோப தேசத்தில் நிர்வாகம், நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெய்ன் பேங்க் வெளியீடு, பக். 160, விலை 100ரூ.

தமிழகத்தின் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான இந்நூலாசிரியர், கலை, இலக்கியம், ஆன்மிகம் போன்ற துறைகளிலும் நாட்டம் கொண்டவர். வாழ்வியல், வணிகவியல், நிர்வாகவியல் பற்றிய நூல்கள், மகாகவி பாரதியார், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற மகான்களைப் பற்றிய நூல்கள் என்று நல்வழிகாட்டக்கூடிய 50-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். அந்த வகையில் அமைந்துள்ளதே இந்நூலும்.

ஹிதம் என்றால் மென்மையான என்றும், உபதேசம் என்றால் அறிவுரை என்றும் பொருள். சுமார் 2000 வருடங்களுக்கு முன் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட, மனித வாழ்க்கைக்கும், தொழிலுக்கும் வழிகாட்டக்கூடிய மென்மையான அறிவுரைகளை, சிறு சிறு கதைகள் மூலம் மனிதல் பதியும்படி கூறப்பட்டவைதான் ஹிதோபதேசக் கதைகள். இவை சிறுவர்களுக்கான கதைகளாகத் தோன்றினாலும், அதிலுள்ள படிப்பினைகள், தொழில்துறைகளிலும் அதிலுள்ள படிப்பினைகள், தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பயன்தரத்தக்கவை. அதாவது தொழில் துவங்குவதற்கான சூழலையும், அதனை வெற்றிகரமாக நடத்துவதற்கான நிர்வாகத் திறனையும், தொழில் வளர்ப்பதற்கான வழிமுறைகளையும், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான யுக்திகளையும் கூறுபவையாக அவை உள்ளன. அந்த வகையில் இந்நூலில் 41 கதைகள் வரிசையாகத் தொகுக்கப்பட்டு, அதற்குப் பிறகு ஒவ்வொரு கதைக்கான வாழ்வியலும், நிர்வாகவியலும் விளக்கப்படுகிறது. இது தவிர, நல்லொழுக்கத்தையும், நல்லெண்ணங்களையும் நற்செயல்களையும் தூண்டக்கூடிய பொன்மொழிகளை வாழ்க்கை நியதிகள் என்ற தலைப்பிலும் நிர்வாக நெறிகள் என்ற தலைப்பிலும் எளிய தமிழில் தொகுத்து விளக்கப்பட்டுள்ளதும் பாராட்டத்தக்கது.-

பரக்கத்.

நன்றி: துக்ளக், 7/8/19.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026939.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.