ஆரிமில்லரின் காமிராவில் கைவண்ணம்
ஆரிமில்லரின் காமிராவில் கைவண்ணம், தமிழில்: எஸ்.எம்.கார்மேகம், முல்லை பதிப்பகம், பக்.96, விலை ரூ.30
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 37 ஆண்டுகள் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியவர் ஹாரி மில்லர். அவர் புகைப்படக் கலை தொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய தொடர், தமிழில் தினமணி கதிர் இதழில் 26.3.1995 முதல் 1.6.1995 வரை வெளிவந்தது. அதனுடைய நூல் வடிவம்தான் இந்நூல்.
விலை உயர்ந்த காமிராவை வைத்து ஒருவர் நல்ல புகைப்படங்களை எடுத்துவிட முடியாது. நல்ல புகைப்படம் எடுக்க புகைப்படம் எடுப்பவர் காமிராவை எப்படிக் கையாள வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும். புகைப்படம் எடுக்கும்போது காமிரா ஷேக் என்ற தவறு நடந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு புகைப்படத்தில் எது முக்கியமாக இடம் பெற வேண்டுமோ அதை மட்டுமே ஃபோகஸ் செய்து எடுக்க வேண்டும்.
சுட்டெரிக்கும் வெயிலில் புகைப்படம் எடுக்கும்போது அளவோடு பிளாஷ் லைட் பயன்படுத்தினால், தேவையற்ற நிழல்கள் படத்தில் இடம் பெறாமல் தவிர்க்க முடியும்.
காமிராவின் லென்ஸுகளைப் பாதுகாக்கவும், வண்ணப் படங்கள் எடுக்கும்போதும் ஃபில்டர்களைப் பயன்படுத்த வேண்டும்.
வெளிச்சம் குறைந்த பகுதிகளில் புகைப்படம் எடுக்கும்போது என்ன செய்ய வேண்டும்? காமிராவில் உள்ள ஷட்டரை நீண்ட நேரம் திறந்து வைத்துப் படம் எடுக்க என்ன செய்ய வேண்டும்? என்ன காமிரா வாங்க வேண்டும்? என்பன போன்ற புகைப்படக்கலை சார்ந்த தொழில்நுட்பங்களை மிக எளிமையாக இந்நூல் விளக்குகிறது .”,
நன்றி: தினமணி, 2/9/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818