தலித் பார்வையில் தமிழ்ப்பண்பாடு

தலித் பார்வையில் தமிழ்ப்பண்பாடு, ராஜ் கவுதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 140ரூ. பழங்காலத் தமிழ் குடிமக்களின் மூலத் தமிழ்ப் பண்பாடு, பின்னர் முடியாட்சி நடைபெற்ற காலத்தில் ஆரியப் பண்பாடு எவ்வாறு தமிழகத்தில் ஊடுருவியது? தமிழ்ப் பண்பாட்டில் பெண்களைப் பற்றிய கருத்துக்கள், பெண்ணியம் மற்றும் தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு ஆகியவை இந்த நூலில் விளக்கமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான கருத்துகளை, கட்டுரைகளாகத் தொகுத்து இருப்பதோடு, இருவருக்கு இடையே நடைபெறும் தலித் மொழியிலான உரையாடல்களாகவும் தந்து இருக்கும் புதிய முயற்சி பாராட்டப்படக்கூடியதாகும். […]

Read more

மெல்லத் திறந்தது கதவு

மெல்லத் திறந்தது கதவு, ஜி.மீனாட்சி, தாமரை பப்ளிகேஷன்ஸ், விலை 105ரூ. 14 சிறுகதைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. இதில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் ஒரு வரியை மட்டுமே கதைக் கருவாகக் கொண்டவை. அந்த ஒரு வரிக் கருவை, சுவையான சம்பவங்களுடன் அழகாக விவரித்து கதைகயை நகர்த்திச் செல்லும் பாங்கு பாராட்டும் வகையில் உள்ளது. வழக்கமான கதைகளில் இருந்து வித்தியாசமாகக் காணப்படும் இந்த சிறு கதைத் தொகுதி அனைவரின் பாராட்டைப்பெறும். நன்றி: தினத்தந்தி, 4/9/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029720.html இந்தப் புத்தகத்தை […]

Read more

அகம் செய விரும்பு

அகம் செய விரும்பு, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், விலை 130ரூ. பிறப்பு எனும் பெருந்தவம், யார் உங்கள் பிக்பாஸ்? நிம்மதி உங்களைத் தேடுகிறது என்பது உள்பட 16 தலைப்புகளில் சிறு கட்டுரைகளாக, கவிதை நடையும் சேர்த்து சிந்தனைக்கு விருந்தளிக்கும் விதத்தில் தொகுத்து தந்து இருக்கிறார், இந்த நூலின் ஆசிரியர் நா.சங்கரராமன். ஒவ்வொரு கட்டுரையையும் விளக்க படத்துடன் ஒரு சிறு கதையையும் சொல்லி சுவை ஊட்டி இருக்கிறார். நாம் எதிர்பாராத விஷயங்கள் இந்த நூலை படிக்கும்போது தெரிகிறது. நன்றி: தினத்தந்தி, 4/9/19. இந்தப் […]

Read more

வலி – இலக்கியம் – அரசியல்

வலி – இலக்கியம் – அரசியல், முனைவர் ஆ.ரேவதி, காவ்யா, பக். 136, விலை 140ரூ. இந்திய சமூகத்தில், ‘வேற்றுமை பார்க்கும் பண்பு’ ஆழமாக வேரூன்றிப் போயுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கொழுந்துவிட்டு எரியும், ‘சாதி’ என்ற தீ, சாதிக்குள் சாதி என்று சல்லி வேர்கள் போல் கிளை பரப்பி, இந்திய மனித சமூகத்தை வதைத்துக் கொண்டிருக்கிறது. மனிதருக்குள் மனிதரை வேற்றுமை பாராட்டி ஒடுக்கியும் விலக்கியும் வைப்பதற்கு எதிராக எழுத்து, ஆயுதமாக பல காலம் கையாளப்பட்டு வந்துள்ளது. இந்நுாலை உருவாக்கியுள்ள நுாலாசிரியர் ரேவதி, […]

Read more

இங்கிலீஷ் பார் கம்யூனிகேஷன்

இங்கிலீஷ் பார் கம்யூனிகேஷன்(ஆங்கிலம்), வி.தாமஸ், ஏஞ்சல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போக்கன் இங்கிலீஷ், விலை 300ரூ. படிப்பில் எந்த நிலையில் இருப்பவர்களும், எத்தனை வயதுக்குழந்தைகளும் எளிதாக ஆங்கிலத்தைப் புரிந்து கொண்டு பேசுவதற்கு உதவி செய்யும் வகையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஆங்கில இலக்கணமும் மிக எளிமையான முறையில் கற்பிக்கப்படும் வகையில் ஒவ்வொரு அத்தியாயமும் எழுதப்பட்டு இருக்கிறது. அத்துடன் போக்குவரத்து விதிகள், முதல் உதவி செய்வது எப்படி என்பதும் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிதைகளும் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 4/9/19. இந்தப் […]

Read more

திராவிட இயக்க இலக்கிய வரலாறு

திராவிட இயக்க இலக்கிய வரலாறு, ப.கமலக்கண்ணன், காவ்யா, விலை 230ரூ. வடநாட்டினரின் ஆதிக்கத்தில் உருவான புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவை பற்றி தமிழ்ச் சமுதாயத்தில் பல நூறு ஆண்டுகளாக ஆழமாக வேரூன்றிப் போன நம்பிக்கைகளைத் துடைத்தெறிவதற்காகத் தோன்றிய திராவிட இயக்க இலக்கியங்களை இந்த நூல் தொகுத்து அவற்றை சிறந்த முறையில் அடையாளப்படுத்தி இருக்கிறது. சாதி வேறுபாடுகள், தீண்டாமை, பெண்ணிய அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்பிய தலைவர்கள், இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக உருவான இயக்கங்கள், இதழ்கள், படைப்பாளிகள், படிப்பாளிகள் ஆகிய அனைத்தையும் இந்த நூல் சிறப்பித்துக்காட்டுகிறது. […]

Read more

கல்கியின் சிறுகதைக் களஞ்சியம்

கல்கியின் சிறுகதைக் களஞ்சியம், ஏ.கே.எஸ்.புக்ஸ் வேல்டு, பக். 548, விலை 450ரூ. பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அலைஓசை, தியாக பூமி போன்ற பெரிய நாவல்களில் வைரச் சுரங்கங்களை வைத்த பேராசிரியர் கல்கி, தன் சிறுகதைகளிலும் அமுதம் தேக்கி வைத்தார். சித்ர வேலைப்பாடுகள் செய்தார். தேச விடுதலையும், பெண் விடுதலையும் கல்கிக்கு இரு கண்கள். இவை அவரது சிறுகதைகளிலும் பிரதிபலித்தன. பழ.சிதம்பரன் என்ற எழுத்தாளர் எழுதினார். கல்கியின் தமிழ் நடை மத்த கஜத்தின் கம்பீர நடையைப் போன்றது. ஜீவ நதியின் நீரோட்டத்திற்கு ஒப்பானது. சிவகாமியின் […]

Read more

ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே

ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே, கவிஞர் முத்துலிங்கம், வானதி பதிப்பகம், பக். 496, விலை 400ரூ. இந்த கட்டுரைத் தொகுதியில், கவிஞர் தன்னைப் பற்றி பேசுகிறார். ஆனால், தன்னை மட்டும் முன் நிறுத்தாது, திரைக்கவி முன்னோடிகள் குறித்து நிறைய பேசுகிறார். பல சம்பவங்கள் குறித்துப் படித்து சிலிர்ப்பு அடைகிறோம். ஒரு படத்தில் டைட்டிலில் மருதகாசி, கண்ணதாசன், தஞ்சை ராமையா தாஸ் ஆகியோர் பெயருக்குக் கீழே, உடுமலை நாராயணகவி பெயரைப் போட்டனர். அப்போது ஒரு நண்பர், உடுமலையாரிடம் என்னய்யா, எவ்வளவு பெரிய சீனியர் நீங்கள், உங்களுக்குக் கீழே […]

Read more

ஓரம்போ

ஓரம்போ, மாடும் வண்டியும், முனைவர் த.ஜான்சி பால்ராஜ், என்சிபிஎச், விலை 130ரூ. மாட்டு வண்டியில் மண் வாசனையோடு பயணப்பட்ட நாட்களை நினைவூட்டுகிறது இந்நூல். நூலாசிரியர் மாட்டு வண்டியை அக்குஅக்காக ஆய்ந்து நூலை எழுதியிருக்கிறார். மாட்டு வண்டியின் அமைப்பு, வகைகள், வெவ்வேறு பயன்பாடுகள், ரேக்ளா வண்டிகள், தண்ணீர் கொண்டுவரும் நகரத்தார் பகுதி வண்டிகள், வண்டியின் முக்கிய பாகமான சக்கரங்களின் உராய்வைக் குறைக்கும் மை தயாரிப்பு, வண்டி மாடுகளின் வகைகள், அவற்றின் நோய்களுக்காகப் போடும் சூட்டின் அடையாளங்கள் வண்டிகளைத் தயாரிக்கும் மரத்தச்சர்கள், சக்கரங்களுக்கு இரும்பு வளையம் மாட்டும் […]

Read more

காற்றின் அலை வரிசை

காற்றின் அலை வரிசை, ஹாம் ரேடியோ ஓர் அறிமுகம், தங்க.ஜெய்சக்திவேல், டெஸ்லா பதிப்பகம், விலை 100ரூ. வானொலிகளின் பரிணாம வளர்ச்சியை அறிந்துகொள்வதன் வாயிலாக ஒரு காலகட்டத்தையே நாம் அறிந்துகொள்ள முடியும். வானொலிகள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் ஜெய்.சக்திவேல் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், ஹாம் ரேடியோ குறித்து எளிமையான அறிமுகம் தருகிறது. ஹாம் ரேடியோ என்பது என்ன, அதில் என்னென்ன வகைகள் இருக்கின்றன, ஹாம் ரேடியோவுக்கான உரிமைகளை எப்படிப் பெறுவது உள்ளிட்ட பல விஷயங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அரிதாக அறியப்பட்ட ஹாம் ரேடியோவானது தகவல்தொடர்பு, பொழுதுபோக்கோடு […]

Read more
1 4 5 6 7 8