அகம் செய விரும்பு

அகம் செய விரும்பு, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், விலை 130ரூ. பிறப்பு எனும் பெருந்தவம், யார் உங்கள் பிக்பாஸ்? நிம்மதி உங்களைத் தேடுகிறது என்பது உள்பட 16 தலைப்புகளில் சிறு கட்டுரைகளாக, கவிதை நடையும் சேர்த்து சிந்தனைக்கு விருந்தளிக்கும் விதத்தில் தொகுத்து தந்து இருக்கிறார், இந்த நூலின் ஆசிரியர் நா.சங்கரராமன். ஒவ்வொரு கட்டுரையையும் விளக்க படத்துடன் ஒரு சிறு கதையையும் சொல்லி சுவை ஊட்டி இருக்கிறார். நாம் எதிர்பாராத விஷயங்கள் இந்த நூலை படிக்கும்போது தெரிகிறது. நன்றி: தினத்தந்தி, 4/9/19. இந்தப் […]

Read more

தலைவர்கள் தேவை

தலைவர்கள் தேவை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், விலை 120ரூ. “உங்களை நல்ல நம்பிக்கைகளால் நிரப்பிக் கொள்ளுங்கள். வருங்காலத் தலைவர்களாக வருவீர்கள்” என்ற அடிப்படையில் மாணவர்களுக்காக, இளைஞர்களுக்காக முனைவர் நா. சங்கரராமன் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரைகளின் தொகுப்பு. 15 கட்டுரைகள் மூலம் அவர்களின் உள்ளத்தில் நம்பிக்கைகளை விதைக்கிறார். நன்றி : தினத்தந்தி,23/8/2017.

Read more

என் பெயர் நம்பிக்கை

என் பெயர் நம்பிக்கை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக், 120, விலை 80ரூ. நூலாசிரியர் தான் சந்தித்த மனிதர்களையும் அவர்கள் தந்த அனுபவங்களையும் பாடங்களையும் நம்பிக்கை தரும் வகையில் முகநூலில் எழுதி வந்ததன் தொகுப்பு இந்நூல். நம்பிக்கையான அனுபவங்களும் சம்பவங்களும் படிக்கப் படிக்க ஆர்வம். நன்றி: குமுதம், 5/10/2016.

Read more

எண்ணுவது உயர்வு

எண்ணுவது உயர்வு (பாரதியின் புதிய ஆத்திசூடி விளக்கவுரை), முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. அச்சம் தவிர் துவங்கி’, ‘வவ்வுதல் நீக்கு’ வரை உள்ள, பாரதியின், 110 புதிய ஆத்திசூடி வரிகளுக்கு, 240 பக்கங்களில், நா.சங்கரராமன் விளக்கவுரை எழுதி உள்ளார். பலர், செய்யுளுக்கான விளக்கவுரையில், தாம் படித்த இலக்கியங்கள், தமது கருத்துக்களை எடுத்துக்காட்டி விளக்குவர். ஆனால், இந்த நூலில், முழுக்க முழுக்க, பாரதியின் மற்ற கவிதைகள், அவை இயற்றப்பட்ட சூழல், அவர் வாழ்வில் கடைபிடித்த நெறிகளை கூறி விளக்கி […]

Read more

நம்பிக்கை நாட்காட்டி

நம்பிக்கை நாட்காட்டி, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக்., 120, விலை 80ரூ. என் பெயர் நம்பிக்கை அனுபவங்கள் ஒவ்வொன்றும் எதையாவது கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அந்த அனுபவங்களே நம்முடைய வாழ்விற்கான அர்த்தங்கள். எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும் என்றால், நம்முடைய நிகழ்கால வாழ்க்கை சிறப்பாகவும், ரசனையோடும் இருத்தல் அவசியமாகிறது என்பதை படைப்பின் மூலம் உணர்ந்து, மற்றவர்களையும் வாசிப்பின் மூலம் உணர வைத்திருக்கிறார் நூலாசிரியர் சங்கரராமன். மொத்தம், 48 தலைப்புகளில் பக்கத்திற்கு பக்கம் சிந்திக்க வைத்திருக்கிறார். தலைப்புகளின் துவக்கமும், முடிவிலும் ஒரு […]

Read more

என் பெயர் நம்பிக்கை

என் பெயர் நம்பிக்கை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், விலை 80ரூ. வாழ்க்கையில் சறுக்கி கீழே விழும்போதும், அதில் இருந்து எழும்பி மேலே வரும்போதும் நாம் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறோம். அப்போது மறக்க முடியாத சம்பவங்களும், அரங்கேறுகின்றன. இப்படி சுவாரசியம் நிறைந்த வாழ்க்கை பயணத்தில் ஒவ்வொரு நாளும் தான் சந்தித்த மனிர்தர்களையும், அவர்கள் தந்த அனுபவங்களையும், பாடங்களையும் தொகுத்து எழுதி உள்ளார், இந்த நூலின் ஆசிரியர் முனைவர் நா. சங்கரராமன். மழலைகளைக் கொண்டாடுவோம், நல்லதையே நினைப்போம் இப்படி 48 சிறு சிறு தலைப்புகளில் […]

Read more

வெற்றியே இலட்சியம்

வெற்றியே இலட்சியம், கவிதாசன், குமரன் பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. வெற்றி என்பது முதன்மையாக இருப்பதல்ல. முன்னேறிக்கொண்டே இருப்பது போன்ற முன்னேற்ற முயற்சிகளுக்கு உந்துதலாக இருக்கும் நூல். நன்றி: குமுதம், 18/4/2016.   —- எண்ணுவது உயர்வு, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. பாரதியார் எழுதிய ‘புதிய ஆத்திச்சூடி’ க்கு விளக்கவுரை எழுதியுள்ளார். பாரதியின் கீர்த்தியை பரப்பும் வண்ணம் எளிய நடையில் புத்துரை அமைந்துள்ளது சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.

Read more

எண்ணுவது உயர்வு

எண்ணுவது உயர்வு, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், விலை 150ரூ. அவ்வையார் எழுதிய ஆத்திசூடி நூலுக்கு உயிரோட்டம் கொடுத்து தன்னுடைய புதிய படைப்பை கொடுத்தவர் பாரதியார். அந்த புத்தகத்துக்கு இன்னும் மெருகேற்றி எண்ணுவது உயர்வு (பாரதியின் புதிய ஆத்திசூடி விளக்கவுரை) என்ற தலைப்பில் முனைவர் நா. சங்கரராமன் ஒரு புதிய நூல் வெளியிட்டு உள்ளார். இதில் ‘நம் உயர்வான எண்ணங்கள் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்’ போன்ற உயரிய கருத்துகளை அனைவருக்கும் புரியும் விதத்தில் மிக நேர்த்தியாக உரை எழுதி இருக்கிறார். அச்சம் […]

Read more

அலாரத்தை எழுப்புங்கள்

அலாரத்தை எழுப்புங்கள், முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், கோவை, விலை 150ரூ. செயல்களாலும், சிந்தனைகளாலும் ஒவ்வொரு நாளையும் சாதனை நாளாக மாற்றும் பொறுப்பும், சக்தியும் நம்மிடம்தான் உள்ளது என்பதை உணரும்போது வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பதை இந்த நூலின் ஆசிரியர் முனைவர் நா. சங்கரராமன் தெளிவாக கூறி உள்ளார். வெற்றி என்ற தாரக மந்திரத்தை மையமாக வைத்து வெற்றியாளர்களையும், அவர்கள் வெற்றி பெற்றதற்கான காரணங்களையும் இந்த நூலில் பட்டியலிட்டு காட்டி இருக்கிறார். அலாரத்தை எழுப்புங்கள், முதல் தூக்கமும் தியானம்தான் உள்பட 20 கட்டுரைகளும் […]

Read more

பாரதப் பெருமகன், டாக்டர் ப. சுப்பராயன்

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன், செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு, பக். 212, விலை 120ரூ. அகன்ற சென்னை மாநிலத்தின் முதல்வராக ஆட்சி புரிந்த முதல் தமிழர் என்ற பெருமையுடைய டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். சட்டப்பேரவை உறுப்பினர் தொடங்கி மாநில ஆளுநர் வரையான அவர் வகித்த பதவிகள், அவரது முன்னோர் பற்றிய வரலாறும் அவரது குமரமங்கலம் இன்றைய தலைமுறை வரையான வரலாறும் கணக்கிடைக்கும் நூல். டாக்டர் சுப்பராயனின் கல்வி, அவர் வகித்த பதவிகளை […]

Read more
1 2