என் பெயர் நம்பிக்கை
என் பெயர் நம்பிக்கை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், விலை 80ரூ.
வாழ்க்கையில் சறுக்கி கீழே விழும்போதும், அதில் இருந்து எழும்பி மேலே வரும்போதும் நாம் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறோம். அப்போது மறக்க முடியாத சம்பவங்களும், அரங்கேறுகின்றன.
இப்படி சுவாரசியம் நிறைந்த வாழ்க்கை பயணத்தில் ஒவ்வொரு நாளும் தான் சந்தித்த மனிர்தர்களையும், அவர்கள் தந்த அனுபவங்களையும், பாடங்களையும் தொகுத்து எழுதி உள்ளார், இந்த நூலின் ஆசிரியர் முனைவர் நா. சங்கரராமன்.
மழலைகளைக் கொண்டாடுவோம், நல்லதையே நினைப்போம் இப்படி 48 சிறு சிறு தலைப்புகளில் தன்னுடைய வாழ்க்கை சம்பவங்களை சுவைபட எழுதி இருக்கிறார். “என் நம்பிக்கை” என்ற தலைப்புக்கு ஏற்ப இந்த புத்தகத்தில் நம்பிக்கையூட்டும் சிந்தனைகளும், கருத்துகளும் பரவலாக சிதறி கிடக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 7.9.2016.