தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள்

தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள், செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், பக். 136, விலை 130ரூ. இவ்வூருக்கு இவ்வளவு பெருமைகளா என்று வியக்க வைக்கும் செய்திகள் ஏராளம். குறிப்பாக, நம் தேசப்பிதா காந்தி, நான்கு முறை ஈரோடுக்கு வந்துள்ளார் என்ற செய்தி, நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாத ஒன்று. இந்தியாவின் தொன்மையான பாலங்களில் காளிங்கராயன் வாய்க்காலும் ஒன்று உள்ளிட்ட தகவல்களைக் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 8/10/2017.

Read more

பழனி வரலாற்று ஆவணங்கள்

பழனி வரலாற்று ஆவணங்கள், செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், விலை 200ரூ. இந்த நூலில் பழனிமலை சுப்பிரமணியர் (முருகன்) கோயில், பெரியாவுடையார் கோவில் ஆகியவற்றில் உள்ள கல்வெட்டுக்களையும், பழனிமலை அடிவாரத்தில் உள்ள பல மடங்களைச் சேர்ந்த செப்புப் பட்டயம் ஆகிய ஆவணங்களையும் தொகுத்து வகைப்படுத்தி விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் செ. இராசு, தமிழ்ப் பல்கலைகக்ழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் ஓயாது கள ஆய்வு செய்து மிகுந்த ஈடுபாடு கொண்டு செய்துள்ள இந்த ஆவணத் தொகுப்பு பல அரிய செய்திகளைக் கொண்டுள்ளது. இத்தொகுப்பில் உள்ள […]

Read more

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன், புலவர் செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், பக். 212, விலை 120ரூ. கழிவுநீர் வடிகால இணைப்பிற்குக் கூட, வார்டு கவுன்சிலருக்குக் கமிஷன் தர வேண்டியுள்ளது என்கிறார், பழ. கருப்பையா. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஊடுருவியிருக்கும் ஊழலைப் பற்றி, அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கும் தீய உறவைப் பற்றி அவர் பேசுகிறார். இதற்கெல்லாம் தீர்வு இருக்கிறதா? அவருக்கு, ப. சுப்பராயன் வரலாற்றைப் பரிந்துரைக்கிறோம். சட்டசபை உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், மாநில அமைச்சர். மாநில முதன்மை அமைச்சர், அரசியல் […]

Read more

பாரதப் பெருமகன், டாக்டர் ப. சுப்பராயன்

பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன், செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு, பக். 212, விலை 120ரூ. அகன்ற சென்னை மாநிலத்தின் முதல்வராக ஆட்சி புரிந்த முதல் தமிழர் என்ற பெருமையுடைய டாக்டர் ப. சுப்பராயன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். சட்டப்பேரவை உறுப்பினர் தொடங்கி மாநில ஆளுநர் வரையான அவர் வகித்த பதவிகள், அவரது முன்னோர் பற்றிய வரலாறும் அவரது குமரமங்கலம் இன்றைய தலைமுறை வரையான வரலாறும் கணக்கிடைக்கும் நூல். டாக்டர் சுப்பராயனின் கல்வி, அவர் வகித்த பதவிகளை […]

Read more

கொங்கு வேளாளர் வரலாறு

கொங்குவேளாளர் வரலாறு, முதல்பாகம், புலவர் செ. ராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு 638011, பக். 330, விலை 350ரூ. மனைமேல் பணம் அளிப்பது ஏன்? கொங்கு நாட்டைப் பற்றியும், அதன் காணியாளர்களான, கொங்கு வேளாளர்களின் நாகரிக பண்பாட்டு பெருமைகள், வரலாற்று கீர்த்திகள், கொங்கு வேளாளர்களின் முக்கிய குலங்கள், கூட்டங்கள், குடிகள் மற்றும் அதன் உட்பிரிவுகள் ஆகியவை பற்றியும், மிக விரிவாகவும், துல்லியமாகவும் ஆய்வு செய்து தந்துள்ளார் நூலாசிரியர். தொல்பொருள் ஆய்வு, இலக்கியத் திறனாய்வு, தனிப்பாடல்கள், நாட்டுப்பாடல்கள், காணிப்பாடல்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் […]

Read more

கொங்குவேளாளர் குல வரலாறு

கொங்குவேளாளர் குல வரலாறு, முதல்பாகம், புலவர் செ. ராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு 638011, பக். 330, விலை 350ரூ. தமிழகத்தின் ஐந்து பகுதிகளுள் ஒன்றான கொங்கு நாட்டில் உழவைத் தொழிலாகக் கொண்ட வேளாண் மக்கள் கொங்கு வேளாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பிற வேளாளர் சமூகத்தினரிடமிருந்து தனி அடையாளமாகக் கொங்கு என்ற அடைமொழி சேர்த்து அழைக்கின்றனர். அந்த மக்களின் உட்பிரிவான குலங்கள் குறித்த வரலாற்றைக் கூறும் நூல் இது. கூட்டம் கூட்டமாகக் குடியேறிய காரணத்தாலும், பண்டைக் கால சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டமாக வாழ்ந்தாலும் […]

Read more