கொங்குவேளாளர் குல வரலாறு
கொங்குவேளாளர் குல வரலாறு, முதல்பாகம், புலவர் செ. ராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு 638011, பக். 330, விலை 350ரூ.
தமிழகத்தின் ஐந்து பகுதிகளுள் ஒன்றான கொங்கு நாட்டில் உழவைத் தொழிலாகக் கொண்ட வேளாண் மக்கள் கொங்கு வேளாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பிற வேளாளர் சமூகத்தினரிடமிருந்து தனி அடையாளமாகக் கொங்கு என்ற அடைமொழி சேர்த்து அழைக்கின்றனர். அந்த மக்களின் உட்பிரிவான குலங்கள் குறித்த வரலாற்றைக் கூறும் நூல் இது. கூட்டம் கூட்டமாகக் குடியேறிய காரணத்தாலும், பண்டைக் கால சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டமாக வாழ்ந்தாலும் தங்களுக்கான அடையாளப் பெயரைக் கூட்டம் என்று அழைத்தனர். இது பெரும்பாலும் பேச்சு வழக்கில் இருந்தாலும் ஆய்வாளர்கள் குலம் என்று கூறுகின்றனர். கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, காணிப்பாடல்கள், பழந்தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் தக்க சான்றுகள் மூலம் 57 கொங்கு வேளாளர் குலங்களின் வரலாற்றை இந்நூலில் விரிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். ஒவ்வொரு குலத்தின் பெயர்க்காரணம் அந்தக் குலத்துக்குச் சேர்ந்த காணியூர்கள், அக்குலத்தில் பிறந்த வரலாற்று நாயகர்கள், அது குறித்த இலக்கிய, கல்வெட்டு, செப்பேடு பாடல் சான்றுகள் என்று விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினமணி, 16/9/12.
—-
ருத்திராட்சங்களின் மகிமைகள், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38,, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 40ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-727-8.html
சிவபக்தர்கள் அணிவது ருத்ராட்சம், அதற்குள்ள சக்திகளை இந்நூல் விளக்குகிறது. ருத்ராட்சங்களில் ஐந்து முகம், பதினொரு முகம், இருபது முகம் என்று பலவகை உள்ளன. எதற்கு, எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்று விவரிக்கிறார்கள் நூலாசிரியர்கள் குருப்ரியன், குஹப்பிரியன். நன்றி; தினத்தந்தி, 12/12/12.