பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன்
பாரதப் பெருமகன் டாக்டர் ப. சுப்பராயன், புலவர் செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், பக். 212, விலை 120ரூ.
கழிவுநீர் வடிகால இணைப்பிற்குக் கூட, வார்டு கவுன்சிலருக்குக் கமிஷன் தர வேண்டியுள்ளது என்கிறார், பழ. கருப்பையா. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஊடுருவியிருக்கும் ஊழலைப் பற்றி, அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கும் தீய உறவைப் பற்றி அவர் பேசுகிறார். இதற்கெல்லாம் தீர்வு இருக்கிறதா? அவருக்கு, ப. சுப்பராயன் வரலாற்றைப் பரிந்துரைக்கிறோம். சட்டசபை உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், மாநில அமைச்சர். மாநில முதன்மை அமைச்சர், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களைவை உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர், தமிழக காங்கிரஸ் தலைவர், வெளிநாட்டுத் தூதுவர், மாநில கவர்னர் ஆகிய பதவிகளை அலங்கரித்தவர் ப. சுப்பராயன். சுப்பராயனின் முன்னோர்களுக்கு, சேலம் மாவட்டம் குமாரமங்கலம் ஜமீனில், 60 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இருந்தன. இத்தனை இருந்தும் கை சுத்தமாக இருந்தவர் சுப்பராயன். விடுதலைப் போரில், காந்தியின் அறை கூவலை ஏற்றுக்கொண்டு, 1940ல், தனி நபர் சத்தியாகிரஹத்தில் ஈடுபட்டு, மனைவி ராதாபாயோடு, ஆறு மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்தவர் அவர் (பக். 90). -சுப்பு. நன்றி: தினமலர், 31/1/2016.