வேத கணிதம்
வேத கணிதம், அன்பழகன், நோஷன் பிரஸ், பக். 187, விலை 220ரூ.
வேத கணிதம் எனப்படும் கணித சிந்தனையில், எளிய முறையில் எண்களின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த 30 ஆண்டு காலமாக பிரபலமாக விளங்கி வரும் இந்த சிந்தனைகளையே நூலாசிரியர், ‘வேத கணிதம்’ என்ற தலைப்பில், இந்த நூலில் வழங்கியுள்ளார். ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் இந்த கருத்துகளை குறிப்பிட்டிருந்தாலும், தமிழில் அவ்வளவாக புத்தகங்கள் அமையவில்லை. அந்த குறையை இந்த புத்தகம் நீக்கி உள்ளது. அதற்கு நூலாசிரியரை பாராட்டலாம். வேத கணித கருத்துகளில் தென்படும் அனேக எளிய வழிமுறைகள் இதில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த கணித முறைகளை நூறாண்டுகளுக்கு முன்பே பாரதி கிருஷ்ண தீர்த்தஜி எனும் பூரி மடாதிபதி வழங்கியுள்ளார். எனவே ‘வேத கணிதம்’ என, அழைப்பதற்கு பதிலாக, ‘எளிய முறையில் கணிதம்’ என, அழைப்பது மிக பொருத்தமாக அமையும். வேலைவாய்ப்பிற்கான தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்ளும் தமிழ்வழி மாணவர்களுக்கு, இந்த புத்தகம் பயனுள்ளதாக அமையும். -பை சிவா. நன்றி: தினமலர், 24/1/2016.