ஒவ்வொரு கணமும்
ஒவ்வொரு கணமும், சுகதேவ், நோஷன் பிரஸ்,விலை: ரூ.170 மூத்த பத்திரிகையாளரும் தூதரக ஊடக ஆலோசகருமான சுகதேவின் முதல் கவிதைத் தொகுப்பு. எளிமையான சொற்களில் ஆழமான கருத்தை நிறுவ முடியும் என்ற அவரது நம்பிக்கை, கட்டுரைகளைப் போலவே கவிதைகளிலும் சாத்தியப்பட்டிருக்கிறது. பொழுதுகள் மாறிக் கிடக்கும் நவீன வாழ்க்கைக்கு இரவில் கரையும் காகங்களை உருவகமாக்கியிருப்பது சிறப்பு. ‘வரலாறு என்பது உண்மையில் யாருக்கும் தெரியாத ரகசியம்’ என்பது போன்ற ஒற்றை வரித் தெறிப்புகள் நிறைய எதிர்ப்படுகின்றன. சமகாலக் கவிதை, கவிஞர்கள் குறித்த ஆழமான விமர்சனமாக அமைந்திருக்கிறது இத்தொகுப்பின் முன்னுரை. […]
Read more