ஓரம்போ

ஓரம்போ, மாடும் வண்டியும், முனைவர் த.ஜான்சி பால்ராஜ், என்சிபிஎச், விலை 130ரூ. மாட்டு வண்டியில் மண் வாசனையோடு பயணப்பட்ட நாட்களை நினைவூட்டுகிறது இந்நூல். நூலாசிரியர் மாட்டு வண்டியை அக்குஅக்காக ஆய்ந்து நூலை எழுதியிருக்கிறார். மாட்டு வண்டியின் அமைப்பு, வகைகள், வெவ்வேறு பயன்பாடுகள், ரேக்ளா வண்டிகள், தண்ணீர் கொண்டுவரும் நகரத்தார் பகுதி வண்டிகள், வண்டியின் முக்கிய பாகமான சக்கரங்களின் உராய்வைக் குறைக்கும் மை தயாரிப்பு, வண்டி மாடுகளின் வகைகள், அவற்றின் நோய்களுக்காகப் போடும் சூட்டின் அடையாளங்கள் வண்டிகளைத் தயாரிக்கும் மரத்தச்சர்கள், சக்கரங்களுக்கு இரும்பு வளையம் மாட்டும் […]

Read more

இரவு

இரவு, கலைச்செல்வி, என்சிபிஎச், விலை 140 ரூ. பிடித்த கதைகளில் சில ரகசியங்கள் கட்டவிழ்க்கப்பட்ட மேலும் மேலும் மர்மப் புன்னகையுடன் அவை நழுவிக் கொண்டு தான் இருக்கின்றன. அகமும் புறமுமான தேடல்களை கதைகள் ஆகி இருக்கிறேன் என்று சொல்லும் நூலாசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. இந்தக் கிளி கூண்டில் தொடங்கி அம்மாவும் தனமும் உள்ளிட்ட 15 கதைகள் அடங்கியுள்ளன. சராசரியான வாழ்க்கைச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் மனித மன ஓட்டங்களை வெகு யதார்த்தமாக பதிவு செய்துள்ள கதைகளாகவே அனைத்துக் கதைகளும் உள்ளன. எளிமையான […]

Read more