நன்மாறன் கோட்டைக் கதை

நன்மாறன் கோட்டைக் கதை, இமையம், க்ரியா வெளியீடு, விலை 225ரூ. பெண்களின் பிரச்சினைகளை, அவர்களின் வெவ்வேறு மன இயல்புகளை முன்னிறுத்தி எழுதுவதில் இமையம் தனித்துவமிக்கவர். இத்தொகுப்பிலுள்ள ஆறு கதைகள் பெண்களை மையப்படுத்தியவையே. ஆதிக்க சாதி வெறிக்குக் கணவனைப் பலிகொடுத்துவிட்டு மூன்று பிள்ளைகளுடன் ஊரை விட்டே செல்ல முடிவெடுத்த ‘நன்மாறன் கோட்டைக் கதை’யின் செல்வமணி, இன்னொரு பெண்ணுடன் இருந்த தொடர்பைத் தட்டிக்கேட்டதற்காக ஊரறிய தன்னை அடித்து அவமானப்படுத்திய தன் கணவனை அதே ஊரறிய தன் கணவனின் ஒட்டுமொத்த ஆண்பிம்பத்தையும் குலைத்துப்போடும் ‘தலைக்கடன்’ கதையின் சீனியம்மா, ‘பொட்டச்சி […]

Read more

எங்கதெ

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 எங்கதெ, இமையம், க்ரியா, விலை 110ரூ. இந்த ஆண்டு அதிகம் பேரால் படிக்கப்பட்டு, பரவலாகப் பேசப்பட்ட நாவல் இது. விளிம்புநிலை மக்களின் வாழ்வை யதார்த்தமான சித்திரங்களாக முன்வைப்பதில் தேர்ந்தவரான இமையம், இந்த நூலில் ஓர் ஆணின் மன அவசத்தைப் புனைகதையாக்கியிருக்கிறார். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

எங்கதெ

எங்கதெ, இமையம், க்ரியா, சென்னை, விலை 110ரூ. சாவுற வெளையாட்டு ஆண் பெண் உறவுகளில் இருக்கும் சிக்கல்களை உரத்துப் பேசும் பல கதைகள் தமிழில் வந்துள்ளன. அவற்றில் சிறந்த கதைகளின் வரிசையில் முன்னணியில் வைக்க வேண்டியவற்றில் ஒன்று இமையம் எழுதியிருக்கும் எங் கதெ. இந்த நெடுங்கதையில் திருமணமாகி கணவனை இழந்த ஒரு பெண் மீது ஒருவன் கொண்ட காதல், அந்த ஆணின் பார்வையில் அவனது மொழியில் விவரிக்கப்படுகிறது. இந்த வெளையாட்டுக்கு நானாத்தான் போனேன். அவ கூப்பிடல, அவ இந்த வெளையாட்டுக்கு வல்லன்னுதா சொன்னா. வெளையாட்டுல […]

Read more

கொலைச்சேவல்

கொலைச்சேவல், இமையம், க்ரியா வெளியீடு, சென்னை, பக். 172, விலை 180ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-157-5.html இமையத்தின் கதையுலகம் தரும் வாழ்வின் சித்திரங்கள் இமையம் என்னும் கலைஞனின் இருப்பைத் தவிர்க்க முடியாததாக ஆக்குகின்றன. இமையத்தின் கவிதைகளின் வழி அல்லாமல் வேறு வழிகளில் இந்த அனுபவங்களுக்கு ஆளாக இயலாது என்பது அவரது படைப்புகளின் மதிப்பைக் கூட்டுகின்றன. அனுபவங்கள் கலை நோக்குடனும் செய்நேர்த்தியுடனும் மறுஆக்கம் செய்யப்படும்போது நிகழும் மாயம் இது. வஞ்சிக்கப்பட்டதன் ஆத்திரமும் பழிவாங்கும் வன்மமும் மனித மனங்களை ஆக்கிரமித்துக் […]

Read more

கொலைச்சேவல்

கொலைச்சேவல், இமையம், க்ரியா, சென்னை, விலை 180ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-157-5.html எளிய மனிதர்களின் கதைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் நம்காலத்தின் ஆகச்சிறந்த யதார்த்த எழுத்தாளர் இமையம். இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு கொலைச்சேவல். கிராமப்புறங்கள் நவீன வாழ்க்கையை எதிர்கொள்வது பற்றிய பெருமூச்சுகளாக இந்நூலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் உள்ளன. வாசிப்பவர்களை அறையும் பட்டவர்த்தனமான யதார்த்த உண்மைகளைச் சொல்லும் கதைகளாக இவை படைக்கப்பட்டுள்ளன. அணையும் நெருப்பு என்கிற கதையில் வரும் கணவனை இழந்து சமூகத்தாலும் […]

Read more