நம் காலத்துக் கவிதை

நம் காலத்துக் கவிதை, (நவீன கவிதை குறித்த கட்டுரைகள்), விக்ரமாதித்யன், படைப்புப் பதிப்பகம், விலை: ரூ.150 . கவிதை எழுதுபவர்கள் அதிகரித்திருக்கும் தற்காலத்தில் கவிதை விமர்சகர்கள் அருகிவருகிறார்கள். எனினும், பல்லாண்டுகளாகக் கவிதை எழுதுவதுடன் கவிதை விமர்சனங்களும் எழுதிவருபவர் கவிஞர் விக்ரமாதித்யன். முன்னோடிகள், தன் சம வயது கவிகள் பற்றி எழுதுவதுடன் இளம் கவிகளைப் பற்றியும் தொடர்ந்து ஆதுரத்துடன் எழுதிவருகிறார். அவரது கவிதை விமர்சன நூல்களின் வரிசையில் தற்போது இந்நூல் வெளியாகியிருக்கிறது. ந.பிச்சமூர்த்தி, ஞானக்கூத்தன் தொடங்கி தற்காலக் கவிஞர்கள் பிரான்ஸிஸ் கிருபா, அ.வெண்ணிலா இன்னும் இளைய கவிகள் பலரையும் பற்றி எழுதியிருக்கிறார். […]

Read more

கவிதையும் கத்தரிக்காயும்

கவிதையும் கத்தரிக்காயும், விக்ரமாதித்யன், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 90ரூ. கவியின் பெருமூச்சு கவிதையும் கத்தரிக்காயும் என்ற கவிஞர் விக்கிரமாதித்தனின் கவிதைத் தொகுப்பில் 1990-ல் இருந்து 2010 வரை பல்வேறு இலக்கிய சிற்றிதழ்கள், பேரிதழ்களில் வெளிவந்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன. எளிமையான நீரோடை போன்ற கவிதைகள். நம்பிக்கையும் அவநம்பிக்கையுமாக மாறிமாறி பிரதிபலித்துச் செல்கறி காலக்கண்ணாடி. சமகாலத்தின் முகங்களை விமர்சிக்கவும் வியக்கவும் செய்கிற மொழியின் ஜாலம். தென்னை வளர்த்தால் துட்டுமேல் துட்டு தமிழ்க்கவிதை வளர்த்தால் ததிங்கிணத்தோம் தாளம்தான் – என்று 1990-ல் எழுதும் கவிஞர், கத்தரிக்காய்க்குத் தரும் […]

Read more

விக்ரமாதித்யனின் அவன் எப்போது தாத்தாவானான்

அவன் எப்போது தாத்தாவானான், விக்ரமாதித்யன், நற்றிணை பதிப்பகம், 243A, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 5, பக்கங்கள் 128, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-799-7.html கவிதையின் ஆழம் தெரிந்தவர்களுக்கு விக்ரமாதித்யனின் குரல் கேட்காமல் போனதில்லை. ‘அவன் எப்போது தாத்தாவானான்’-இல் கேட்பதெல்லாம் தன்னுணர்ச்சிக் குரல்கள்தான். ஆனால் அத்தனையும் தனித்துவம் மிக்கவை. வாசிப்போர் யாவரையும் வசப்படுத்திவிடக்கூடிய கவிதைக்குரல் அது. கவிஞனும் / சிந்தனைப் போலத்தான் / என்ன இவன் வார்த்தைகள் வரிகள் என / இருக்கிறான் / […]

Read more