விக்ரமாதித்யனின் அவன் எப்போது தாத்தாவானான்
அவன் எப்போது தாத்தாவானான், விக்ரமாதித்யன், நற்றிணை பதிப்பகம், 243A, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 5, பக்கங்கள் 128, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-799-7.html
கவிதையின் ஆழம் தெரிந்தவர்களுக்கு விக்ரமாதித்யனின் குரல் கேட்காமல் போனதில்லை. ‘அவன் எப்போது தாத்தாவானான்’-இல் கேட்பதெல்லாம் தன்னுணர்ச்சிக் குரல்கள்தான். ஆனால் அத்தனையும் தனித்துவம் மிக்கவை. வாசிப்போர் யாவரையும் வசப்படுத்திவிடக்கூடிய கவிதைக்குரல் அது. கவிஞனும் / சிந்தனைப் போலத்தான் / என்ன இவன் வார்த்தைகள் வரிகள் என / இருக்கிறான் / வாழ்கிறான். கால புருஷனைத் தொழுது / காலம் கழிகிறது. நிலம் திரிந்து / பாலை என்றான பின்னே / இருந்தாலென்ன கடல் கொண்டாலென்ன – விக்ரமாதித்யனின் இத்தகைய கவிதைக் குரல்கள் கண்களால் மட்டுமே கேட்கக்கூடிய காட்சிக்குரல்கள். படித்தால் யாவருக்கும் இவரது பயணத்தடம் பழகிப்போகும். நன்றி – குமுதம், 27 பிப்ரவரி 2013.