வீணையின் குரல் (எஸ். பாலசந்தர் வாழ்க்கை வரலாறு)

  வீணையின் குரல் (எஸ். பாலசந்தர் வாழ்க்கை வரலாறு), காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் – 629001, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-0.html

1934ல் பிரபல இந்தி டைரக்டர் வி. சாந்தாராம் தமிழில் தயாரித்த சீதா கல்யாணம் படத்தில் 7வயது சிறுவனாக கஞ்சிரா வாசித்தவர். 1948-ல் இரட்டை வேட நடிப்பில் வந்த முதல் சமூகப்படமான இது நிஜமாவில், கதாநாயகனாக இரட்டை வேடம் தாங்கி நடித்தவர். பாடல் – நடனம் இல்லாமல் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படமான ஏவி. எம். மின் அந்த நாள் (கதாநாயகன் சிவாஜிகணேசன்) படத்தின் டைரக்டர். ஏவி. எம். மின் பெண் படத்தில் வைஜயந்தி மாலாவுடனும், ஜுபிடரின் கைதியில் பானுமதியுடனும் இணைந்து நடித்தவர். இப்படி பல சாதனைகளுக்கு உரியவர் எஸ். பாலசந்தர். இவர் சொந்தமாகத் தயாரித்து டைரக்ட் செய்த பொம்மை மாபெரும் வெற்றி பெற்ற சஸ்பென்ஸ் படம். சகலகலா வல்லவராகத் திகழ்ந்தும், திரை உலகின் போக்கு தமக்கு ஒத்து வராததால் அதை விட்டு விலகி, முழு நேர வீணை வித்துவானாக மாறினார். வீணை வாசிப்பதில் மிகப் புகழ் பெற்றிருந்த வேளையில், இசை குறித்து சில சங்கீத வித்வான்களுடன் அவர் நடத்திய விவாதம் தீவிரம் அடைந்து, சங்கீத சபாக்களில் புயல் வீசச் செய்தது. 63 வயதுவரை மட்டுமே வாழ்ந்தாலும், சினிமா உலகிலும், இசை உலகிலும் பெரும் சாதனைகளைச் செய்த மேதை எஸ். பாலசந்தர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை விக்ரம் சம்பத் அருமையாக எழுதியுள்ளார். அதை வீயெஸ்வி அழகாகத் தமிழாக்கம் செய்துள்ளார். அபூர்வமான புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. நன்றி – தினத்தந்தி, 20 பிப்ரவரி 2013.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *